Home
Mobile

OnePlus-ன் ஹேப்பி நியூ இயர்.. மினி போன் உட்பட 4 லேட்டஸ்ட் போன்கள் மீது திடீர் டிஸ்கவுண்ட்!

இந்தியாவில் உள்ள ஒன்பிளஸ் (OnePlus) ரசிகர்கள் மற்றும் 2026 புத்தாண்டிற்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற தேடலில் உள்ளவர்களை ஈர்க்கும் படியாக, ஒன்பிளஸ் நிறுவனமானது ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் (OnePlus Community Sale) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது

இந்த சிறப்பு விற்பனையின் கீழ் ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள், ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒன்பிளஸ் ஆடியோ தயாரிப்புகள் மீது அபாரமான டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் நேரலையில் உள்ள இந்த சிறப்பு விற்பனை, நாளை (டிசம்பர் 18 ஆம் தேதி) வரை நீடிக்கும்.

OnePlus மினி போன் உட்பட 4 லேட்டஸ்ட் போன்கள் மீது திடீர் டிஸ்கவுண்ட்!

ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் என்கிற இந்த சிறப்பு விற்பனையின் போது என்னென்ன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் என்ன ஆபர் விலைக்கு வாங்க கிடைக்கும்? வங்கி சலுகைகள் (Bank Offers) பயன்படுத்தப்பட்டவுடன், சில பிரபலமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை எவ்வளவு குறையும் என்கிற விவரங்கள் இதோ:

1. ஒன்பிளஸ் 15 (OnePlus 15) - ரூ.68,999 முதல் தொடங்கும்
2. ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) - ரூ.51,999 முதல் தொடங்கும்
3. ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) - ரூ.30,749 முதல் தொடங்கும்
4. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) - ரூ 23,749 முதல் தொடங்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி மேற்கண்ட விலைகள் ஆனது அதிகபட்ச பொருந்தக்கூடிய வங்கி தள்ளுபடியை பிரதிபலிக்கின்றன. எழும் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஒன்பிளஸ் ஆடியோ தயாரிப்புகளிலும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. அப்படியாக வங்கி சலுகைகள் பயன்படுத்தப்பட்டவுடன், சில பிரபலமான ஒன்பிளஸ் ஆடியோ தயாரிப்புகளின் விலை எவ்வளவு குறையும் என்கிற விவரங்கள் இதோ:

1. ஒன்பிளஸ் புல்லட்ஸ் இஸட்2 ஏஎன்சி (OnePlus Bullets Z2 ANC) - ரூ.1,599
2. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 (OnePlus Buds Pro 3) - ரூ.7,799
3. ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2ஆர் (OnePlus Nord Buds 2r) - ரூ.1,599
4. ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 (OnePlus Nord Buds 3) - ரூ.1,749

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது 165 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே (1272 x 2772 பிக்சல்ஸ்) ரெசல்யூஷன், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 330 ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 100 சதவீதம் டிசிஐ-பி3 கலர் கேமட் மற்றும் 1.07 பில்லியன் கலர்களுக்கான ஆதரவு உடனான 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஆனது அட்ரெனோ 840 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காமின் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

அதில் 24மிமீ ஃபோக்கல் லெங்த் உடனான 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா உள்ளன. இதன் ரியர் கேமரா யூனிட்டால் 30 எப்பிஎஸ்-இல் 8கே வீடியோக்களை படமாக்க முடியும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15 ஸ்மாட்போன் ஆனது 7300mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது சுமார் 39 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Community Sale OnePlus 15 OnePlus 13s OnePlus Nord 5 and more gets Discount Un till Dec 18
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X