OnePlus CEO-வின் அடேங்கப்பா விளக்கம்.. OnePlus 13s போனின் பெயரில் உள்ள S என்கிற எழுத்துக்கு என்ன அர்த்தம்?
இந்தியாவில் ஜூன் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், அதன் டிசைன் குறித்த போஸ்டர்கள் மற்றும் சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஏற்கனவே பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது வழக்கமான ஒன்பிளஸ் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை (OnePlus Flagship Smartphones) விட சிறியதாகவும், காம்பாக்ட் (Compact) ஆகவும் உள்ளது. இது ஒரு கையால் பிடித்து பயன்படுத்த எளிதான ஸ்மார்ட்போனை விரும்புவோருக்கு ஒரு பெரிய விஷயமாகும். ஆனால் ஒன்பிளஸ் 13எஸ் பற்றி அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அது என்னவென்றால் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள "எஸ்" என்ற எழுத்திற்கு என்ன அர்த்தம் (What does the 'S' in OnePlus 13s mean)?

டிப்ஸ்டர் முகுல் சர்மா (Tipster Mukul Sharma) நடத்திய சமீபத்திய ஏஎம்ஏ (ஆசிக் மீ எனிதிங்) அமர்வின் போது, ஒன்பிளஸ் சிஇஓ-வான ராபின் லியு (OnePlus CEO Robin Liu), ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள எஸ் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை வெளிப்படுத்தி உள்ளார். அவரின் கூற்றுப்படி 'எஸ்' என்பது ஸ்ட்ராங்கர் (Stronger), ஸ்மார்ட்டர் (Smarter) மற்றும் ஸ்மாலர் (Smaller) என்பதை குறிக்கிறது.
"ஸ்ட்ராங்கர்" என்றால் எந்த மூலைகளையும் வெட்டாமல் இந்த போன் கடினமாக உருவாக்கப்பட்டுள்ளது. "ஸ்மார்ட்டர்" என்பது இந்த ஸ்மார்ட்போனை மிகவும் உள்ளுணர்வு மிக்கதாகவும் மற்றும் பயனர் நட்பாகவும் மாற்றும் புதிய ஏஐ அம்சங்களைக் குறிக்கிறது. கடைசியாக "ஸ்மாலர்" என்பது ஒன்பிளஸ் முதல் உண்மையான ஸ்மால் ஸ்மார்ட்போனை குறிக்கிறது.
ஒன்பிளஸ் 13எஸ் இந்திய சந்தையில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் (OnePlus 13s Price in India Expected)? டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் சுமார் ரூ.55,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இது ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஆகிய மாடல்களுக்கு இடையில் இருக்கும். ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருந்தால், அது ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்களை அப்படியே பேக் செய்யும்
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன முக்கிய அம்சங்களை எதிர்பார்க்கலாம் (OnePlus 13s Specifications Expected)? இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் வரையிலான டிபிக்கல் ப்ரைட்னஸ், 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ், டால்பி விஷன் உடனான 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்கொண்டு இயக்கப்படலாம்
இதன் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் 1/1.56 இன்ச் IMX906 சென்சார், எப்/1.8 அபெக்ஷர், OIS உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா, 2x டெலிஃபோட்டோ கேமரா, எப்/2.0 அபெர்க்ஷர் OIS, 4k 60fps வீடியோ ரெக்கார்ட் உடனான 50எம்பி இரண்டாம் நிலை கேமரா பேக் செய்யப்படலாம். முன்பக்கத்தில் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா (1080p 30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்) இருக்கலாம்.
பேட்டரியை பொறுத்தவரை இது 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6260mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இது இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், டால்பி அட்மோஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கலாம். கடைசியாக இது அளவீட்டில் 150.81×71.70×8.15மிமீ மற்றும் 185 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








