Home
Mobile

லேட்டஸ்ட் OnePlus போன் மீது 2 அதிரடி ஆபர்.. ரூ.4,599 ஒன்பிளஸ் பட்ஸ் 3 FREE.. ரூ.3000 டிஸ்கவுண்ட்.. என்ன மாடல்?

ஒன்பிளஸ் 13 சீரிஸின் கீழ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமான வேகத்தில், இது ஒன்பிளஸ் 13எஸ் என்கிற பெயரின் கீழ் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.39,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் "முந்தைய" விலை நிர்ணய முறைகளின் அடிப்படையில், ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் சுமார் ரூ.45,000 முதல் 50,000 வரை என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

லேட்டஸ்ட் OnePlus போன் மீது 2 அதிரடி ஆபர்.. ஒன்பிளஸ் பட்ஸ் 3 FREE!

அதாவது ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மாடலை விட சற்று அதிக விலைக்கு வரும். அதே சமயம் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடலை விட விலை குறைவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஒன்பிளஸ் வலைத்தளம் ஆனது ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் மீது 2 வகையான சலுகைகள் அறிவித்துள்ளது.

முதல் சலுகையாக - ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,599 மதிப்புள்ள ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சலுகைக்கு - ஐசிஐசிஐ பேங்க் கார்டு வழியிலான இஎம்ஐ மற்றும் நான்- இஎம்ஐ பரிவர்த்தனைக்கு ரூ.3000 உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது

மீதமுள்ள கேமராக்களை பொறுத்தவரை இது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 13டி (அல்லது ஒன்பிளஸ் 13எஸ்) முக்கிய அம்சங்கள் (OnePlus 13T Specifications):
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2640 x 1216 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 800 நிட்ஸ் வரையிலான டிபிக்கல் ப்ரைட்னஸ்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- டால்பி விஷன்
- ஒப்போ கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே

- 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான ஆக்டாகோரி ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 256ஜிபி / 512ஜிபி/ 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/1.56 இன்ச் IMX906 சென்சார், எப்/1.8 அபெக்ஷர், OIS உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 2x டெலிஃபோட்டோ கேமரா, எப்/2.0 அபெர்க்ஷர் OIS, 4k 60fps வீடியோ ரெக்கார்ட் உடனான 50எம்பி இரண்டாம் நிலை கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா (1080p 30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்)

- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6260mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ர ரெட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்

- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- 4 மைக்ரோஃபோன்கள்
- டால்பி அட்மாஸ்
- அளவீட்டில் 150.81×71.70×8.15மிமீ
- எடையில் 185 கிராம்.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Announced Free OnePlus Buds 3 With OnePlus 13R Ahead OnePlus 13s India Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X