காசு திருப்பி கொடுத்துடுறோம்.. சரண்டர் ஆன OnePlus.. இந்த புது மாடலை வாங்கிய அனைவருக்கும் REFUND அறிவிப்பு!
கடந்த மாதம், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12ஆர் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. வெளியீட்டின் போது, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 256ஜிபி வேரியண்ட் ஆனது யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜுடன் (UFS 4.0 Storage) வரும் என்று ஒன்பிளஸ் அறிவித்திருந்தது.
இருப்பினும், ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 256ஜிபி வேரியண்ட்டை வாங்கிய பல பயனர்கள் குறைவான ரீட் மற்றும் ரைட் ஸ்பீட்ஸ் (Lower read and write speeds) குறித்து சந்தேகம் எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒன்பிளஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டது. அதாவது ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அனைத்து வேரியண்ட்களுமே உண்மையில் யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜுடன் (UFS 3.1 Storage) உடன் வருகின்றன என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது.

இது குறித்த விளக்கத்தில்.. "ஒன்பிளஸ் 12ஆர் அறிமுகத்தின் போது, டிரினிட்டி எஞ்சின் (Trinity Engine) என்கிற புதிய மென்பொருள் அல்காரிதம்களை (Software algorithms) நாங்கள் அறிவித்தோம், இது உங்கள் போனின் மெமரி மற்றும் ஸ்டோரேஜை பல ஆண்டுகளுக்கு வேகமாகவும் சீராகவும் வைத்திருக்க உதவும் ஒரு தொழில்நுட்பமாகும்."
"ஒரு பிழையின் காரணமாக, டிரினிட்டி இன்ஜினால் மேம்படுத்தப்பட்ட ஸ்டோரேஜ் - சில வேரியண்ட்களில் - யுஎப்எஸ் 4.0 ஆக இருக்கும் என்று நாங்கள் தெரிவித்தோம். ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அனைத்து வகைகளிலும் உள்ள ஸ்டோரேஜ் இன்னமும் டிரினிட்டி இன்ஜினால் மேம்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில் அது யுஎப்எஸ் 3.1 தான் என்பதை இப்போது எங்களால் உறுதிப்படுத்த முடியும்" என்று ஒன்பிளஸ் விளக்கமளித்துள்ளது.

இந்த விஷயத்தை "யாருக்கும் பாதிப்பு இல்லாமல்" முன்னோக்கி எடுத்துச்செல்ல, ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைவரும், சிஓஓ-வுமான கிண்டர் லியு (Kinder Liu) புதிய செயல் திட்டமொன்றை அறிவித்துள்ளார். இதன்கீழ் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனைவாங்கியவர்கள் பணத்தை திரும்பப் பெறலாம். இருப்பினும் இதை மார்ச் 16 ஆம் தேதி வரை மட்டுமே செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யுஎப்எஸ் 3.1 மற்றும் யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜிற்கு இடையே என்ன வேறுபாடு உள்ளது? யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் ஆனது திறமையான செயல்திறனுக்காக, வேகமான ரீட் மற்றும் ரைட் வேகத்தை வழங்குகிறது. மறுகையில் உள்ள யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் ஆனது சற்றே மெதுவான ரீட் மற்றும் ரைட் வேகத்தை வழங்கும்.

நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் 11 சீரிஸ் (OnePlus 11 Series) உட்பட, ஒன்பிளஸ் நிறுவனத்தின் பல்வேறு மலிவு விலை பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் (Affordable Premium Smartphones) மற்றும் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் (Mid Range smartphones) யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் தான் உள்ளது.
ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் விலை: நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12 உடன் சேர்த்து இந்தியாவில் அறிமுகமானது. ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.45,999 க்கும் வெளியானது.
மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனும் கூட 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின்கீழ் இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,999 க்கும் வாங்க கிடைக்கிறது.
இவ்விரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுமே ஒன்பிளஸ் இணையதளம், அமேசான் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் வழியாக வாங்க கிடைக்கின்றன. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை கடந்த ஜனவரி 30 முதல் தொடங்கியது. ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கியது.


Click it and Unblock the Notifications








