இப்படியொரு ஒன்பிளஸ் போனுக்காகத் தான் வெயிட்டிங்: தரமான அம்சங்கள்: எப்போது அறிமுகம்.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ(OnePlus Ace Pro) எனும் ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த புதிய போன் அடுத்த மாதம் சீனாவில் அறிமுகமாகும் என்றும் அதன்பின்பு மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ

ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ

இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் நீங்கள் எதிர்பார்க்கும் தரமான அம்சங்கள் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது
சூப்பரான சிப்செட், தனித்துவமான கேமரா, பெரிய டிஸ்பிளே எனப் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று
கூறப்படுகிறது.

Pluto இப்படி தான் இருக்குமா? வானவில் வண்ணத்தில் நூறு மடங்கு அழகு- Nasaக்கு குவியும் பாராட்டு!Pluto இப்படி தான் இருக்குமா? வானவில் வண்ணத்தில் நூறு மடங்கு அழகு- Nasaக்கு குவியும் பாராட்டு!

 பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

இணையத்தில் கசிந்த தகவலின்படி, புதிய ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் ஓடிடி-இல் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.

அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாடியோவ்! என்ன டிசைன்..என்ன சக்தி! புதிய Nubia Z40S Pro அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?அம்மாடியோவ்! என்ன டிசைன்..என்ன சக்தி! புதிய Nubia Z40S Pro அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

 கேமிங் சிப்செட்

கேமிங் சிப்செட்

விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ கேமிங் சிப்செட் வசதி உள்ளது என்றே கூறலாம். அதாவத இந்த புதிய போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒரு நல்ல கேமிங் போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ ஸ்மார்ட்போனுக்கா காத்திருங்கள். அதாவது இந்த புதிய போன் உங்களுக்கு சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும்.

நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?

 சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

இப்போது அறிமுகமாகும் போன்கள் அனைத்தும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் தான் வெளிவருகின்றன. அதேபோல் இந்த ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலும் 150W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும். பின்பு இதில் 4800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இதன் பேட்டரி அம்சங்களை விட கேமரா வசதிதான் இன்னமும் அருமையாக உள்ளது.

பட்ஜெட்டில் பெஸ்டா வாங்க கிடைக்கும் Oppo போன்கள்.. அமேசான் பிரைம் டே சேல்ஸ் டிப்ஸ் கூட இருக்கு!பட்ஜெட்டில் பெஸ்டா வாங்க கிடைக்கும் Oppo போன்கள்.. அமேசான் பிரைம் டே சேல்ஸ் டிப்ஸ் கூட இருக்கு!

அட்டகாசமான கேமராக்கள்

அட்டகாசமான கேமராக்கள்

புதிய ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ போன் ஆனது 32எம்பி செல்பீ கேமரா வசதியுடன் வெளிவரும். அதேபோல் இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா எனகிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த
ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Acer: நீங்கள் எதிர்பார்த்த விலை!ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Acer: நீங்கள் எதிர்பார்த்த விலை!

ஒன்பிளஸ் 10டி

ஒன்பிளஸ் 10டி

அதேபோல்இந்த ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ போனின் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு போன்றவை ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் போன்றே உள்ளதாக
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அறிமுகமானால் தான் இவற்றின் ஒற்றுமைகள் தெரியவரும்.

PAN கார்டில் பெயர், போட்டோ தகவலை மாற்றுவது எப்படி? ஆப்லைன் or ஆன்லைன் சேஞ்சஸ் எது சிறந்தது?PAN கார்டில் பெயர், போட்டோ தகவலை மாற்றுவது எப்படி? ஆப்லைன் or ஆன்லைன் சேஞ்சஸ் எது சிறந்தது?

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி

ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ போனுக்கு காத்திருக்க விருப்பம் இல்லை என்றால் ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த
ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனை பாருங்கள்.

அதாவது ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி போன் 90Hz ரெஃப்ரெஷிங் ரேட், AMOLED டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இதன் வடிவமைப்பு கூட மிகவும் அருமையாக உள்ளது.

படையல் வைத்து விருந்து போடும் Samsung: ஆகஸ்ட் 10 வரை பசியோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!படையல் வைத்து விருந்து போடும் Samsung: ஆகஸ்ட் 10 வரை பசியோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி அம்சங்கள்

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி அம்சங்கள்

OnePlus Nord 2T 5G ஆனது ஆக்டோ கோர் MediaTek Dimensity 1300 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது மேம்பட்ட இயக்க ஆதரவை வழங்கும். அதேபோல் 50எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மேலும் இந்த போனின் மிக முக்கியமான வசதி என்னவென்றால் பாஸ்ட் சார்ஜிங் வசதி தான். அதாவது இந்த போனில் 4,500mAh டூயல் செல் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 80W SuperVOOC வேகமான சார்ஜிங் ஆதரவு வழங்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் எடை 190 கிராம் ஆகும்.

வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ்..ஓஹோனு வாழ்க்கை! அட்டகாச நன்மையுடன் சூப்பர் Jio திட்டம் இது தான்..வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ்..ஓஹோனு வாழ்க்கை! அட்டகாச நன்மையுடன் சூப்பர் Jio திட்டம் இது தான்..

 ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி விலை

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி விலை

8 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,999-ஆக உள்ளது. பின்பு இந்த சாதனம் Gray Shadow மற்றும் Jade Fog நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus Ace Pro smartphone with Snapdragon 8+ Gen1 chipset to launch soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X