மொத்த சாம்ராஜ்யமே மிரளும் 9000mAh பேட்டரி OnePlus போன்.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 185Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் மிரளும்படியான பீச்சர்களுடன் ஒன்பிளஸ் ஏஸ் 7 (OnePlus Ace 7) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இப்போது, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், சிப்செட் மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.
கடந்த ஆண்டு, அக்டோபர் மாதத்தில் ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) ஸ்மார்ட்போன் வெளியாகியது. நவம்பர் மாதத்தில் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) வெளியாகியது. ஆகவே, சீன மார்கெட்டில் அடுத்தடுத்து இந்த மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல ஒன்பிளஸ் ஏஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பது தெரிகிறது. ஏனென்றால், ஒன்பிளஸ் 16 மாடலின் விவரங்கள் கடந்த வாரம் கசிந்தன.

இப்போது, ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனின் விவரங்களும் கசியத் தொடங்கிவிட்டன. டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) தனது வெய்போ (Weibo) பதிவில் பகிர்ந்துள்ள தகவலின்படி, ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனானது, இன்ஜினியரிங் புரோட்டோடைப் (Engineering Prototype) மாடலாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உள்ளது.
1.5K ரெசல்யூஷன் கொண்ட 6.78 இன்ச் ஃபிளாட் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது. இதில் அதிகப்படியான ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) கொடுக்கப்பட இருக்கிறது. அதிகபட்சமாக 240Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் இருக்கலாம். குறைந்தபட்சம் 185Hz ரெஃப்ரெஷ் ரேட்டை இந்த ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும். 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட இருக்கிறது.
இந்த ஃபாஸ்ட் சார்ஜிங்குக்கு ஏற்ப பெரிய 9000mAh பேட்டரியை கொடுக்க இருக்கிறது. இந்த புரோட்டோடைப் மாடலில் கூலிங் ஃபேனும் (Cooling Fan) கிடைக்க உள்ளதாக தெரிகிறது. ஆகவே, பிரீமியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக இருக்கப் போகிறது. இந்த விவரங்கள் மட்டுமே கசிந்துள்ளன. சீன மார்கெட்டில் வெளியாக இருப்பது உறுதியாகும். குளோபல் மார்கெட் குறித்து தெரியவில்லை.
முன்னதாக வெளியான ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் 6.83 இன்ச் 1.5K ரெசொலூஷன் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3nm (Octa Core Snapdragon 8 Elite 3nm) பிராசஸர் மற்றும் அட்ரினோ 830 கிராபிக்ஸ் கார்டு (Adreno 830 GPU) உள்ளது. கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) கொடுக்கப்பட்டு உள்ளது.
50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவில் எப்/1.8 அபெர்சர், ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 8 மெகாபிக்சல் 112 டிகிரி அல்ட்ரா-வைடு கேமராவில் எப்/2.2 அபெர்சர் கிடைக்கிறது. 4K வீடியோக்களை வினாடிக்கு 60 ஃபிரேம்களில் (4K 60 fps) ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவில் எப்/2.4 அபெர்சர் கிடைக்கிறது. இன்ஃபிராரெட் சென்சார் (IR Blaster) கிடைக்கிறது.
இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor) கிடைக்கிறது. தூசி மற்றும் தண்ணீரால் பாதிக்கப்படாத ஐபி66/ஐபி68/ஐபி69/ஐபி69கே ரேட்டிங் கொடுத்துள்ளது. 7800mAh (டைபிகல்) பேட்டரி மற்றும் 120W சூப்பர்வூக் (SuperVOOC) அதிவேக சார்ஜிங் கொடுக்கிறது. ரூ.33,000 பட்ஜெட்டில் சீன மார்கெட்டில் களமிறங்கியது. ஆகவே, ரூ.36,000 பட்ஜெட்டில் ஏஸ் 7 வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications