Home
Mobile

வாங்குனா இப்படி ஒரு போன வாங்கனும்.. 9000mAh பேட்டரி.. 120W ஃபாஸ்ட் சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன் பிரியர்களை மட்டுமல்லாமல், மற்ற ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வாங்கினால் இப்படி ஒரு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று நினைக்க வைக்கும்படி ஒன்பிளஸ் ஏஸ் 7 (OnePlus Ace 7) வெளியாக இருக்கிறது. பேட்டரி, சிப்செட், சார்ஜிங் பீச்சர்கள் கசிந்துள்ளன.

ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனுக்கு பிறகு ஏஸ் சீரிஸ் மாடல்களுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு ஏற்ப ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக இந்த ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன.

வாங்குனா இப்படி ஒரு போன வாங்கனும்.. 9000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்!

ஒன்பிளஸ் ஏஸ் 7 சிறப்பம்சங்கள் (OnePlus Ace 7 Specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் ஏஸ் 7 இருக்கப் போகிறது. 6.78 இன்ச் 1.5K ரெசொலூஷன் கொண்ட பிளாட் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதில் 185Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது.

100W ஃபாஸ்ட் சார்ஜிங் அல்லது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட உள்ளது. 9000mAh பேட்டரியை கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் இருக்கப் போகிறது. கேமிங் மாடலாக இருப்பது தெரிகிறது. ஏனென்றால், ஆக்டிவ் கூலிங் ஃபேன் (Active Fan Cooling) கொடுக்கப்பட உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே தெரியவந்துள்ளன.

முன்னதாக கசிந்த விவரங்களில் ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதில் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் கிடைக்க இருக்கிறது. ஆகவே, டெலிபோட்டோ கேமராவானது ஒன்பிளஸ் ஏஸ் 7 மாடலில் கிடைக்குமா என்பது தெரியவில்லை

முன்னதாக வெளியான ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கிடைக்கிறது. 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஆகவே, ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனில் சிறிய டிஸ்பிளே கிடைக்க இருப்பது தெரிகிறது.

இதிலும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆகவே, ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனில் 185Hz ரெஃப்ரெஸ் ரேட்டை எதிர்பார்க்க முடியும். 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. ஆகவே, ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனிலும் அல்ட்ரா வைடு கேமரா எதிர்பார்க்கலாம்.

இதற்கு பதிலாக டெலிபோட்டோ வருகிறதா அல்லது டிரிபிள் ரியர் கேமரா வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7800mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, இதற்கு அடுத்த மாடலாக இருக்கும் ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனில் பெரிய பேட்டரி கட்டாயம் கிடைக்கும்.

இருப்பினும், ஃபாஸ்ட் சார்ஜிங் 120W அல்லது 100W என்பது ஒன்பிளஸ் நிறுவனத்தின் கையில் இருக்கிறது. இருப்பினும், குறைந்தது 100W கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,000 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனை ரூ.40,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Ace 7 Tipped To Launch With Snapdragon 8 Series Chipset 9000mAh Battery 120W Charging
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X