Home
Mobile

பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு.. அதுக்குள்ள இன்னொரு புது OnePlus போன்.. ஆக்டிவ் கூலிங் + 7800mAh பேட்டரி காம்பினேஷன்!

டாப் கியர் போட்டு போய்க்கொண்ட இருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம். இந்தியாவில் ஒன்பிளஸ் நார்ட் 6 அறிமுகம், அதை தொடர்ந்து சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா அறிமுகம்..இந்தியாவில் ஒன்பிளஸ் சம்மர் சேல் ஆபர்கள் அறிவிப்பு (மே.8 முதல் தொடங்குகிறது), அதற்கு முன்பாகவே (மே.7-ல்) ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 மற்றும் சிஇ 6 லைட் மாடல்களின் இந்திய அறிமுகம்!

இதற்கிடையில் ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் + 7800mAh பேட்டரி காம்பினேஷனில் இன்னொரு புது ஒப்பிலா ஸ்மார்ட்போனை பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளது. அது ஒன்பிளஸ் ஏஸ் 7 (OnePlus Ace 7) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குறித்த ஆரம்பக்கட்ட தகவல்கள், இது - முந்தைய மாடலை (ஒன்பிளஸ் ஏஸ் 6 மாடலை) விட செயல்திறன் மேம்பாடுகளில் தெளிவான கவனம் செலுத்தப்படுவதை சுட்டிக்காட்டுகிறது.

பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு.. அதுக்குள்ள இன்னொரு புது OnePlus போன்!

சீனாவில் ஏஸ் சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்படும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் நார்ட் சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட "வரலாறு"இருப்பதால்.. ஒன்பிளஸ் ஏஸ் 7 மாடல் மீது இந்திய ஒன்பிளஸ் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஒரு கண் வைப்பதில் எந்த தவறும் இல்லை.

ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிகாச்சு வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவல்களின்படி, ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இது ஒன்பிளஸ் ஏஸ் 6 மாடலில் பயன்படுத்தப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் சிப்செட் ஆகும்.

இந்த புதிய சிப், கேமிங் மற்றும் மல்டிடாஸ்கிங் போன்ற கடினமான பணிகளில் மேம்பட்ட செயல்திறனுடன், சிறந்த பவர் சேவிங்கையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஏஸ் 7 மாடலில் ஒரு ஆக்டிவ் கூலிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தக்கூடும் என்றும் மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார்.

இது பில்ட்-இன் ஃபேனை கொண்டிருக்கலாம், இது எக்ஸ்டர்னல் கூலிங் ஆக்சஸெரீயை நம்பியிருந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ராவிலிருந்து ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கிறது. ஒரு ஒருங்கிணைந்த சொல்யூஷன், நீண்ட நேர கேமிங் அமர்வுகளின் போது வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், மேலும் சீரான செயல்திறனை வழங்கவும் உதவலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒன்பிளஸ் ஏஸ் 7 மாடல் கணிசமான மேம்பாடுகளுடன் வரக்கூடும். மற்றொரு நம்பகமான டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி, வரவிருக்கும் ஒன்பிளஸ் டிவைஸ்கள் 200ஹெர்ட்ஸ்-க்கும் அதிகமான அல்ட்ரா ஹை ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டிருக்கலாம் என்றும், இது 240ஹெர்ட்ஸ் டிஸ்பிளேக்களை நோக்கி நகரக்கூடும் என்று கூறியுள்ளார்.

பேட்டரியை பொறுத்தவரை இது ஒன்பிளஸ் ஏஸ் 6 மாடலில் உள்ள அதே பேட்டரியை பேக் செய்ய அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஏஸ் 6 மாடலில் உள்ளதே நல்ல பேட்டரி கெப்பாசிட்டி தான். நினைவூட்டும் வண்ணம் கடந்த அக்டோபர் 2025-இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் ஆனது அதன் 165ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மற்றும் பெரிய 7800mAh பேட்டரி மூலம் ஒரு வலுவான அளவுகோலை அமைத்தது.

ஆக ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனின் வழியாகவும், ஒன்பிளஸ் அந்த அடித்தளத்தின் மீது கூலிங் சிஸ்டம் மற்றும் நீடித்த செயல்திறன் மீது கூர்மையான கவனம் செலுத்தி, இதை இன்னும் பெட்டர் ஆன ஒரு ஸ்மார்ட்போனாக கட்டமைப்பதாக தெரிகிறது. கேமரா மற்றும் டிசைன் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. வெளியாகும் பட்சத்தில், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
OnePlus Ace 7 Reportedly To pack Snapdragon 8 Elite Gen 5 Chipset Active Cooling System What else
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X