Home
Mobile

ஒன்பிளஸ் அறிமுகம் செய்த புது 5ஜி போன்.. 9000எம்ஏஎச் பேட்டரி.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ (OnePlus Ace 7 Pro) ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வேறு பெயரில் அறிமுகம் செய்யப்படும். இப்போது ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ அம்சங்கள் (OnePlus Ace 7 Pro Specifications): 6.78-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 185 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (185Hz Refresh Rate), 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஒன்பிளஸ் அறிமுகம் செய்த புது 5ஜி போன்.. 9000எம்ஏஎச் பேட்டரி..

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் உடன் வெளியாகி உள்ளது ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையன்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறனை வழங்கும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

200எம்பி பிமைரி கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் கலர்ஓஎஸ 17 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் மூலம் இந்த புதிய போன் இயங்குகிறது.

IP66, IP68, IP69 மற்றும் IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)உடன் ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ வெளியாகி உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பிஇ, புளூடூத் 5.4, கலிலியோ (Galileo), குளோனாஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி
போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் இருக்க, இதில் 6,350 mm² அளவிலான 3D வேப்பர் சேம்பர் மற்றும் இன் பில்ட் ஃபேன் கொண்ட டூயல் சேனல் Glacier Air Cooling System கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கூலிங் சிஸ்டம், நீண்ட நேரம் கேமிங் விளையாடும்போதும் போனின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி, சீரான செயல்திறனை வழங்க உதவுகிறது.

ஒன்பிளஸ் அறிமுகம் செய்த புது 5ஜி போன்.. 9000எம்ஏஎச் பேட்டரி..

9000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஃப்ளோயிங் ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் விண்ட்பிரேக்கர் ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.

ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ விலை

  • 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ மாடலின் விலை 4799 yuan (இந்திய மதிப்பில் ரூ.68,570)
  • 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ மாடலின் விலை 5299 yuan (இந்திய மதிப்பில் ரூ.75,715)
  • 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ மாடலின் விலை 5599 yuan (இந்திய மதிப்பில் ரூ.80,005)
  • 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ மாடலின் விலை 5999 yuan (இந்திய மதிப்பில் ரூ.85,720)
  • 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ மாடலின் விலை 7299 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,04,295)
  • தற்போது ஒன்பிளஸ் ஏஸ் 7 ப்ரோ சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
Best Mobiles in India

English summary
OnePlus Ace 7 Pro with 9000mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X