ஸ்டைலான டிசைன்.. அடுத்த ஒன்பிளஸ் 5ஜி போன் ரெடி.. 200எம்பி கேமரா.. 9000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் ஏஸ் 7 (OnePlus Ace 7) ஸ்மார்ட்போனை விரைவில் சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் 7 ஆனது இந்தியாவில் ஒன்பிளஸ் 16ஆர் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனில் இன்பில்ட் கூலிங் ஃபேன் (Cooling Fan) இடம்பெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) என்ற டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள தகவலின்படி, கூலிங் ஃபேன், பிராசஸர் பகுதி மற்றும் பின்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த போன் டூயல் ரியர் கேமரா உடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் ஏஸ் 7 அம்சங்கள் (OnePlus Ace 7 Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 chipset) உடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் வெளியாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையன்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட் சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் 6.78-இன்ச் பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் புதிய ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 185 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (185Hz Refresh Rate), எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி உடன் ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.
அதுவும் 200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒன்பிளஸ் ஏஸ் 7 வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இந்த போன் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகமாகும்.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ, உடன் ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் 9000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credit: AI, gizmochina


Click it and Unblock the Notifications
