Home
Mobile

இதுக்கு தானே வெயிட்டிங்.. 8000mAh பேட்டரி.. 200MP கேமரா.. வருகிறது புது ஒன்பிளஸ் 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் ஏஸ் 7 (OnePlus Ace 7) ஸ்மார்ட்போனை வரும் அக்டோபர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகமாகும். இந்நிலையில் ஒன்பிளஸ் ஏஸ் 7 போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் 7 அம்சங்கள் (OnePlus Ace 7 Specifications): 6.78-இன்ச் பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் புதிய ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 185 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (185Hz Refresh Rate), எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

இதுக்கு தானே வெயிட்டிங்.. வருகிறது புது ஒன்பிளஸ் 5ஜி போன்.. எந்த மாடல்

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 chipset) உடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் வெளியாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையன்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட் சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி உடன் ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒன்பிளஸ் ஏஸ் 7 வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகமாகும்.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுக்கு தானே வெயிட்டிங்.. வருகிறது புது ஒன்பிளஸ் 5ஜி போன்.. எந்த மாடல்

8000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Ace 7 India launch Timeline and specifications leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X