எதிர்பார்ப்பு எகிறுடுச்சு.. 8000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. வருகிறது புது OnePlus போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) ஸ்மார்ட்போனை இந்த மாதம் இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒன்பிளஸ் ஏஸ் 6டி போன் ஆனது இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் ஏஸ் 6டி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒன்பிளஸ் ஏஸ் 6டி அம்சங்கள் (OnePlus Ace 6T Specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் உடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

6.7-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில்1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது.
அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display fingerprint sensor) வசதியும் இந்த
ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனில் உள்ளது. IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன்.
அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
8000mAh பேட்டரி உடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.
எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-Axis Linear Motor), டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன்.
ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளன. குறிப்பாக ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








