Home
Mobile

பொசுக்குனு போயிருச்சே.. OnePlus 15R க்கு வந்த சோதனை.. நீ பொழைச்சுக்குவ சீனா.. முதல்ல அவங்கதான்!

ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் கொண்ட முதலாவது மாடலாக ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) வெளியாக இருக்கிறது. இந்த போனின் சீன வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதே ஸ்மார்ட்போன் வேறொரு மாடலாக வெளியாக இருக்கிறது.

இந்திய மார்கெட்டில் டிசம்பர் 17ஆம் தேதியில் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) வெளியாக இருக்கிறது. இதே தேதியில் குளோபல் மார்கெட்டிலும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்ட பிறகு ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்டுடன் வெளியாகும் முதல் மாடலாக இது இருக்கப் போவதும் தெரியவந்தது.

பொசுக்குனு போயிருச்சே! OnePlus 15R க்கு வந்த சோதனை.. நீ பொழைச்சுக்குவ!

ஆகவே, இந்தியாவில் இருக்கும் ஒன்பிளஸ் பிரியர்கள் மற்றும் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் பிரியர்கள் இப்போதே காத்திருக்க தொடங்கிவிட்டனர். ஆனால், இப்போது முதலாவது ஸ்மார்ட்போன் என்ற பட்டத்தை ஒன்பிளஸ் ஏஸ் 6டி எடுத்து கொள்ளப் போகிறது. ஏனென்றால், டிசம்பர் 3ஆம் தேதியே அந்த போன் வெளியாக இருக்கிறது.

ஆனால், சீன மார்கெட்டில் மட்டுமே வெளியாகும். குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் 15ஆர் மாடலாக வெளியாக இருப்பதால், பெயருக்கு ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் கொண்ட முதலாவது குளோபல் மாடல் என்று சொல்லி கொள்ளலாம். எப்படியும் சீன மார்கெட்டில் முதலிலேயே கிடைக்க போவதை மறுக்க முடியாது.

ஒன்பிளஸ் ஏஸ் 6டி அம்சங்கள் (OnePlus Ace 6T Specifications): 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 165 எப்பிஎஸ் ஃபிரேம் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி கொண்டுள்ளது. அலெர்ட் ஸ்லைடர் (Alert Slider) கிடைக்காது. சில்க் மற்றும் ஃபைபர்கிளாஸ் பினிஷிங் கொண்ட ஷார்ட்கட் கீ (Shortcut Key) கிடைக்கிறது.

பிளாட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மெட்டல் ஃபிரேம் (Metal Frame) மற்றும் மெட்டல் கியூப் டெகோ (Metal Cube Deco) கிடைக்கிறது. இந்த பிரீமியம் டிசைனுடன் ஃபிளாஷ் பிளாக் (Flash Black), பாண்டம் கிரீன் (Phantom Green) மற்றும் எலக்ட்ரிக் பர்பிள் (Electric Purple) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த அம்சங்கள் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன.

அதேபோல ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் கிடைப்பதும் உறுதியாகும். மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் கலர்ஓஎஸ் 16 கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் வெளியாகும் வெர்ஷனில் ஓர்ஜின் ஓஎஸ் 16 கிடைக்க இருக்கிறது. 8000mAh பேட்டரியை இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி கொடுக்க இருக்கிறது. இதற்கு 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வர இருக்கிறது.

அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் ஃபிங்க்பிரிண்ட் சென்சார் (Ultrasonic In-screen Fingerprint Sensor) மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கிடைக்கிறது. 12 ஜிபி ரேம், 16 ஜிபி ரேம் வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. மேலும், 256 ஜிபி மெமரி, 512 ஜிபி மெமரி மற்றும் 1 டிபி மெமரி வேரியண்ட்களும் கிடைக்க இருக்கின்றன. 32 மெகா பிக்சல் செல்பீ கேமராவை இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி கொடுக்கிறது.

மேலும், 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமராவும் கொடுக்கப்படுகிறது. எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-axis Linear Motor) வருகிறது. இதில் கிடைக்க இருக்கும் பெரும்பால பீச்சர்கள் இந்தியாவில் வெளியாகும் ஒன்பிளஸ் 15ஆர் மாடலிலும் கிடைக்கும். ஆகவே, இதன் வெளியீட்டின்போது முழு பீச்சர்களை தெரிந்து கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 6T With Snapdragon 8 Gen 5 8000mAh Battery Launching on December 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X