Home
Mobile

இந்த ஒத்த போனுக்கு மொத்தமா வெயிட்டிங்.. 8300mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. புது OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன் பிரியர்கள் ஒட்டுமொத்த பேரையும் வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) மாடலின் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்கள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே பேட்டரி கேபாசிட்டி கிடைக்க இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் 15ஆர் (Oneplus 15R) மாடலாகவும், சீன மார்கெட்டில் ஒன்பிளஸ் ஏஸ் 6டி மாடலாகவும் இது வெளியாக இருக்கிறது. இதில் 8000mAh பேட்டரி கிடைக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இப்போது 8300mAh பேட்டரியை கொடுக்க இருப்பதை ஒன்பிளஸ் நிறுவனத்தின் சீன தலைவர் லூயிஸ் ஜீ உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இந்த ஒத்த போனுக்கு மொத்தமா வெயிட்டிங்.. 8300mAh பேட்டரி.. 100W சார்ஜ்!

அதோடு 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருப்பதையும் உறுதி செய்துள்ளார். சீன மார்கெட்டில் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி வெளியாக இருக்கிறது. பிளாஷ் பிளாக் (Flash Black), பாண்டம் கிரீன் (Phantom Green) மற்றும் எலக்ட்ரிக் பர்பிள் (Electric Purple) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் கிரீன் மற்றும் பிளாக் கலர்கள் மட்டும் கிடைக்க இருக்கிறது.

ஒன்பிளஸ் ஏஸ் 6டி அம்சங்கள் (OnePlus Ace 6T Specifications): 8300mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் கொண்ட முதலாவது மாடலாகவும் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி இருக்கிறது. டூயல் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. முன்பு பார்த்த மூன்று கலர்களுடன் ஷார்ட் கட் கீ கொண்ட மாடலாக இது கிடைக்க இருக்கிறது.

மேலும், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 165 எப்பிஎஸ் ஃபிரேம் ரேட் கிடைக்கிறது. இந்த அம்சங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மற்ற அம்சங்கள் ஏற்கனவே சீன மார்கெட்டில் கசிந்துவிட்டன. இந்த அம்சங்களை பார்க்கையில், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 16 (Colour OS 16) கொடுக்கப்பட இருக்கிறது.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட் வர இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 மெகா பிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமராவும் கிடைக்க இருக்கிறது.

32 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் ஃபிங்க்பிரிண்ட் சென்சார் (Ultrasonic In-screen Fingerprint Sensor) ஆகியவை அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவில் கொடுக்கப்பட இருக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கொடுக்கப்பட இருக்கிறது. 165 எப்பிஎஸ் ஃபிரேம் ரேட் வருவதால் இது கேமிங் மாடலாக இருக்கிறது.

ஆகவே, இதற்கு ஏற்ப எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-axis Linear Motor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா மற்றும் குளோபல் மார்கெட்டில் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தியாவில் கூடுதலாக ஒன்பிளஸ் பேட் கோ 2 (OnePlus Pad Go 2) வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. சீனாவில் முன்னதாகவே கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 6T With 8300mAh battery 100W Fast Charging Confirmed Ahead Of China Launch on December 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X