Home
Mobile

நாளைக்கு லான்ச் ஆகும் புதிய OnePlus 5ஜி போன்.. 8300mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) ஸ்மார்ட்போனை நாளை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதே ஸ்மார்ட்போன் உலக சந்தையில் ஒன்பிளஸ் 15ஆர் எனும் பெயரில் அறிமுகமாகும். மேலும் இப்போது இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் 6டி அம்சங்கள் (OnePlus Ace 6T Specifications): ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே உடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

நாளைக்கு லான்ச் ஆகும் புதிய OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் உடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது.

அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display fingerprint sensor) வசதியும் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனில் உள்ளது. IP66+IP68+IP69+IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன்.

அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

8300mAh பேட்டரி உடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-Axis Linear Motor), டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 6T will be launched in China tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X