Home
Mobile

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. 8300mAh பேட்டரி.. IP69K ரேட்டிங்.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ஒன்பிளஸ் ஏஸ் 6டி OnePlus Ace 6T) ஸ்மார்ட்போனை இன்று (டிசம்பர் 3) சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். இதே ஒன்பிளஸ் போன் உலக சந்தையிலும், இந்திய சந்தையிலும் ஒன்பிளஸ் 15ஆர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும். இப்போது இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் 6டி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் 6டி அம்சங்கள் (OnePlus Ace 6T Specifications): ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் 6.83-இன்ச் 1.5கே அமோலெட் டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800×1272 பிக்சல்ஸ், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

வந்துட்டான்யா.. வந்துட்டான்.. 8300mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Octa Core Snapdragon 8 Gen 5) சிப்செட் உடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

50எம்பி Sony IMX906 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது.

இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

IP66+IP68+IP69+IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன். கலர்ஓஸ் 16 (ColorOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16)இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஒன்பிளஸ் போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

8300mAh பேட்டரி உடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பிஇ, புளூடூத் 6.0, கலிலியோ யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. ஃபிளாஷ் பிளாக், ஷேடோ கிரீன், எலக்ட்ரிக் வயலட் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரிஆதரவும் இதில் உள்ளது.

ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 2599 yuan (இந்திய மதிப்பில் ரூ.33,150)-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 6T to be launched with 8300mAh battery: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X