OnePlus இது முரட்டு ரகம்.. 8000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 165Hz டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த ஸ்மார்ட்போன்?
ஒட்டுமொத்த ஒன்பிளஸ் (OnePlus) பிரியர்களும் 'இது வரட்டும் அப்புறம் வேற ஸ்மார்ட்போன் வாங்குறத பத்தி யோசிக்கலாம்' என்று வெயிட்டிங் மோடில் காத்திருக்கும்படியான ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) இருக்கிறது. இந்த மாடலின் முக்கிய விவரங்கள் இப்போது தெரியவந்துள்ளது. சீனாவில் எப்போது வெளியாக இருக்கிறது?
ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனுக்கு அடுத்து இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி மாடல் வெளியாக இருக்கிறது. நவம்பர் மாதத்துக்குள் வெளியாகும் என்று ஒன்பிளஸ் நிறுவனமே உறுதி செய்துள்ளது. ஆகவே, வெளியீடு நெருங்கிவிட்டதால், டிஸ்பிளே, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ரேம் போன்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.

இப்போது, கலர் மற்றும் டிசைன் விவரங்களை ஒன்பிளஸ் நிறுவனமே உறுதி செய்துள்ளது. ஆகவே, இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஃபிளாஷ் பிளாக் (Flash Black), பாண்டம் கிரீன் (Phantom Green) மற்றும் எலக்ட்ரிக் பர்பிள் (Electric Purple) ஆகிய கலர்கள் வர இருக்கின்றன. இது பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) போல இருக்கிறது.
ஆகவே, மெட்டல் கேமரா டெகோ (Metal Camera Deco) கிடைக்கிறது. டூயல் ரியர் சிஸ்டம் உள்ளது. ஆகவே, மெயின் கேமரா மற்றும் அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கும். பெரிய பிளாட் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் அல்ட்ரா நேரவ் பெசல் (Ultra-narrow Bezels) கிடைக்கிறது. ஷார்ட் கட் கீ (Shortcut Key) கிடைக்கிறது. மெட்டல் ஃபிரேம் (Metal Frame) கிடைக்கிறது.
மேலும், ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) கிடைக்கிறது. ஆகவே, ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை போல லுக் மட்டுமல்லாமல் டிசைனையும் பார்க்க முடிகிறது இந்த டிசைன் மற்றும் கலர் விவரங்கள் உறுதியாகி இருக்கின்றன. இப்போது, டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கசிந்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் ஏஸ் 6டி அம்சங்கள் (OnePlus Ace 6T Specifications): இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.
மேலும், அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் 16 ஜிபி ரேம் கிடைக்க இருக்கிறது. 3டி அல்ட்ராசோனி ஃபிங்கர்பிரிண்ட் (3D Ultrasonic Fingerprint) வருகிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. சீன மார்கெட்டில் ரூ.40,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். சீனாவுக்கு பிறகு குளோபல் மற்றும் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது.
ஆனால், இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடலாக வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல இந்தியாவில் வெளியாகும்போது ரூ.44,999 பட்ஜெட்டில் களமிறங்கும் என்றும் தெரியவருகிறது. முன்னதாக இந்தியாவில் வெளியான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: 6.78 இன்ச் (2772 x 1272 ரெசொலுஷன்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 165Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட், அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.
50 எம்பி டெலிபோட்டோ மற்றும் 32 செல்பீ கேமரா கிடைக்கிறது. 7300mAh பேட்டரி கிடைக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K கிடைக்கிறது. இந்தியாவில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.72,999ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








