மொத்த சாம்ராஜ்யத்தை மிரளவிட்ட OnePlus போன்.. 7800mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. IP69K ரேட்டிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டையும் மிரளவிடும்படி ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிட்-பிரீமியம் மாடலான ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) ஸ்மார்ட்போனின் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ஐபி ரேட்டிங் மற்றும் ரெஃப்ரெஷ் ரேட் போன்ற பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. 7800mAh பேட்டரி, 120W சார்ஜிங், IP69K ரேட்டிங், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் போன்ற டாப்-எண்ட் பீச்சர்களுடன் மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் வெளியீட்டு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கின்றன. இதில் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. அதோடு முக்கிய பீச்சர்களும் கசிந்தன. இந்த பீச்சர்களே ஸ்மார்ட்போன் மார்கெட்டை மிரளவிட்டது.

ஆனால், இப்போது அந்த நிறுவனமே பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ஐபி ரேட்டிங் மற்றும் ரெஃப்ரெஷ் ரேட் போன்ற பீச்சர்களை உறுதி செய்துள்ளது. இதனால், ஒன்பிளஸ் பிரியர்கள் இப்போதே வெயிட்டிங் மோடுக்கு சென்றுவிட்டனர். 7300mAh பேட்டரியுடன் கிடைக்கும் ஒன்பிளஸ் 15 மாடலைவிட அதிக பேட்டரி கேபாசிட்டியுடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 மாடல் கிடைக்க இருக்கிறது.
ஒன்பிளஸ் ஏஸ் 6 அம்சங்கள் (OnePlus Ace 6 Specifications): இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஃபைபாஸ் சார்ஜிங் (BYBASS Charging) சப்போர்ட் கொண்ட 7800mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. 165Hz அல்ட்ரா-ஹை ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. மெட்டல் மிடில் ஃபிரேம் (Metal Middle Frame) கிடைக்க இருக்கிறது.
அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic In-display Fingerprint Sensor) வர இருக்கிறது. அண்டர் வாட்டர் போட்டோகிராபி ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும்படியான ஐபி ரேட்டிங் கிடைக்கிறது. ஆகவே, இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வர இருக்கிறது.
இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. இப்போது, மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்க இருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எஸ்ஓசி (Octa Core Snapdragon 8 Elite SoC) கிடைக்க இருக்கிறது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்க இருக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா வர இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப் வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. மூன்று கலர்களில் வெளியாக இருக்கிறது.
ஆகவே, ஒயிட் (White), சில்வர் (Silver) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் குளோபல் மார்கெட்டில் வெளியாகும் போது ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் மாடலாக கிடைக்கலாம். ரூ.50,000 பட்ஜெட்டில் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








