முரட்டு OnePlus இதுதான்.. 7800mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. 16GB ரேம்.. 165Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) ஸ்மார்ட்போனின் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ஐபி ரேட்டிங் மற்றும் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகியதை தொடர்ந்து, இப்போது முழு பீச்சர்களும் சீன மார்கெட்டில் கசிந்துள்ளன. இப்போதைக்கு அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 இருக்கிறது. டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களும் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி இருக்கின்றன. முழு பீச்சர்கள் மற்றும் வெளியீட்டு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் ஏஸ் 6 டர்போ (OnePlus Ace 6 Turbo) ஸ்மார்ட்போனில் 8000mAh பேட்டரி கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஒன்பிளஸ் நிறுவனம் அதை உறுதி செய்யவில்லை. ஆனால், ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் 7800mAh பேட்டரி கிடைக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. இந்த மாடல் வரும் அக்டோபர் 27ஆம் தேதி சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது.

ஒன்பிளஸ் ஏஸ் 6 அம்சங்கள் (OnePlus Ace 6 Specifications): இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. லேட்டஸ்ட் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்க இருக்கிறது.
6.78 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் அந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் கிடைக்கிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி உள்ளது.
4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்க இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்களும் வெளியாக இருக்கின்றன.

16 எம்பி செல்பீ கேமரா கிடைக்க இருக்கிறது. 7800mAh பேட்டரி மற்றும் 120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது.
யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்க இருக்கிறது. ஒட்டுமொத்த டியூரபிலிட்டியும் கொடுக்கும்படி IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இதுபோக IP69K ரேட்டிங் கிடைக்கிறது. வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) வருகிறது.
இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் குயிக் சில்வர் (Quick Silver), ஃபிளாஷ் ஒயிட் (Flash White) மற்றும் ரேசிங் பிளாக் (Racing Black) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன. இதில் கலர், பேட்டரி, சார்ஜிங், டிஸ்பிளே, ஐபி ரேட்டிங் பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதியானவை. மற்றவை மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. அக்டோபர் 27ஆம் தேதி தெரியவரும்.


Click it and Unblock the Notifications








