Home
Mobile

வரிசை கட்டும் புது OnePlus 5ஜி போன்கள்.. OnePlus 15T, OnePlus Nord 6 இல்லாம புதுசா ஒரு Ultra மாடல்!

வருகிற மார்ச் 24 ஆம் தேதி அன்று, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) மாடலை சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. சீன அறிமுகத்தை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஒன்பிளஸ் 15எஸ் இங்கே வருவதற்கு முன்பாகவே (ஏப்ரல் மாதத்தில்) ஒன்பிளஸ் நோர்ட் 6 சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி (OnePlus Nord 6 5G) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி (OnePlus Nord 6 CE 5G) ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரிசை கட்டும் புது OnePlus 5ஜி போன்கள்.. புதுசா ஒரு Ultra மாடல்!

இதற்கிடையில் அடுத்த (ஏப்ரல்) மாதம், இந்நிறுவனம் மேலுமொரு புதிய மாடலை அறிமுகம் செய்வதன் மூலம் அதன் ஒன்பிளஸ் ஏஸ் 6 சீரீஸை விரிவுபடுத்தலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அதாவது தற்போதுள்ள ஒன்பிளஸ் ஏஸ் 6 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஆகிய மாடல்களுடன், ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா (OnePlus Ace 6 Ultra) என்றழைக்கப்படும் ஒரு புதிய மாடலும் விரைவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுமா? ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரீபிராண்டிங் செய்யப்படுமா? அதாவது சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஆக அறிமுகமான மாடல் நோர்ட் பிராண்டிங்கின் கீழ் "அதே அம்சங்களுடன், ஆனால் வேறு மாடல் பெயரில்" இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இப்போதைக்கு எதையும் உறுதியாக சொல்ல முடியாது.

ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ராவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிகாச்சுவின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ராவானது 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான "பிரம்மாண்டமான" 6.8-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். சிப்செட்டை பொறுத்தவரை இது டிமென்சிட்டி 9500 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இதுதவிர்த்து மற்ற அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை.

கேமரா கிங் ஆக வரும் ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ்: இந்த ஸ்மார்ட்போனில் புதிய லுமோ லைட் கண்டென்சிங் இமேஜிங் சிஸ்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஜூம் ஹார்டுவேர் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ், புதிய போர்ட்ரெய்ட் மோட்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேப்சர் டூல்களும் இடம்பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் பகிர்ந்துள்ள விவரங்களின் படி, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் 50-மெகாபிக்சல் சோனி அல்ட்ரா விஷன் மெயின் கேமரா இடம்பெறும். இந்த மெயின் கேமராவானது 3.5x ஆப்டிகல் ஜூம் வழங்கும் 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவுடன் இணைக்கப்படும். இது 7x வரை லாஸ்லெஸ் ஜூம் ஆதரவை வழங்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது.

பேட்டரி கிங் ஆக வரும் ஒன்பிளஸ் நோர்ட் 6: இது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 9000mAh பேட்டரியை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட்6 ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் இயக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை இது 50எம்பி LYT-600 OIS ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ராவைட் ஆங்கிள் கேமராக்களுடன் வரலாம். தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 ரேட்டிங் உடன் வரலாம். கடைசியாக இது 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 6 Ultra With Big 6 8 inch 165Hz Display Dimensity 9500 Chip Launching 2026 April Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X