Home
Mobile

OnePlus அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 8600mAh பேட்டரி.. IP69K ரேட்டிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா (OnePlus Ace 6 Ultra) ஸ்மார்ட்போன் இன்று (ஏப்ரல் 28) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இந்த போன் இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா அம்சங்கள் (OnePlus Ace 6 Ultra Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 480Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate), 1,272×2,772 பிக்சல்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

OnePlus அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 8600mAh பேட்டரி! எந்த மாடல்?

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 எஸ்ஒசி (MediaTek Dimensity 9500 SoC) சிப்செட் உடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜிபியு கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளது. இதுதவிர 6000mm² vapor chamber கூலிங் சிஸ்டம் இந்த போனில் உள்ளது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் 20X டிஜிட்டல் ஜூம், 4கே வீடியோ பதிவு ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor), பேஸ் அன்லாக் (Face Unlock) போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன. ColorOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

8600mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

OnePlus அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 8600mAh பேட்டரி! எந்த மாடல்?

IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா போன் வெளியாகி உள்ளது. 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 7, புளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஏஸ் அவேக்கனிங் (Ace Awakening) மற்றும் மெட்டல் ஸ்டார்ம் (Metal Storm) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா மாடலின் விலை CNY 3,499 (இந்திய மதிப்பில் ரூ.48,400)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா மாடலின் விலை CNY 3,799 (இந்திய மதிப்பில் ரூ.52,500)
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா மாடலின் விலை CNY 4,099 (இந்திய மதிப்பில் ரூ.56,700)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா மாடலின் விலை CNY 4,399 (இந்திய மதிப்பில் ரூ.60,800)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா மாடலின் விலை CNY 5,099 (இந்திய மதிப்பில் ரூ.75,500)

Best Mobiles in India

English summary
OnePlus Ace 6 Ultra With 8600mAh battery launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X