Home
Mobile

மொத்த மார்கெட் காலி.. 165 Hz OLED டிஸ்பிளே.. 9000mAh பேட்டரி.. 3D ஃபிங்கர்பிரிண்ட்.. அடுத்த OnePlus மாடல்!

ஒன்பிளஸ் நிறுவனம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500) சிப்செட் மற்றும் 165 Hz ரெஃப்ரெஷ் ரேட் ஓஎல்இடி டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை டெஸ்டிங் செய்து வருகிறது. ஒன்பிளஸ் டர்போ 6 மற்றும் ஒன்பிளஸ் டர்போ 6வி மாடல்களுக்கு அடுத்ததாக இது அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளளாம.

2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா (OnePlus Ace 5 Ultra) ஸ்மார்ட்போன் களமிறங்கியது. மீடியாடெக் டைமன்சிட்டி 9400பிளஸ் (MediaTek Dimensity 9400+) சிப்செட் கொண்ட மாடலாக இது இருந்தது. ஆகவே, மீடியாடெக் டைமன்சிட்டி 9500பிளஸ் (MediaTek Dimensity 9500+) சிப்செட் கொண்ட மாடலாக ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா (OnePlus Ace 6 Ultra) கிடைக்க இருந்தது.

மொத்த மார்கெட் காலி.. 165 Hz OLED டிஸ்பிளே.. 9000mAh பேட்டரி.. மாடல்?

ஆனால், 2026 ஆம் ஆண்டில் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 பிளஸ் சிப்செட் வெளியாக வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது. அதே நேரத்தில் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் தயாராகவும் இருக்கிறது. ஆகவே, ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் கொண்ட மாடலாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு ஏற்ப டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக அடுத்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்டுடன் டெஸ்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும், 165 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் எல்டிபிஎஸ் ஓஎல்இடி (LTPS OLED) டிஸ்பிளே, அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint) அதில் வருகிறது.

9000mAh பேட்டரியை குறிக்கும்படி 8 கிளாஸ் டெஸ்டிங் கொண்டுள்ளதாகவும் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக தெரியவந்துள்ளது. ஆகவே, ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா ஸ்மார்ட்போன் போலவே இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போனும் மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதற்கு ஏற்பவே சீன மார்கெட்டில் பீச்சர்கள் கசிய தொடங்கி உள்ளன.

ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா அம்சங்கள் (OnePlus Ace 5 Ultra Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 9400பிளஸ் சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா கொண்டுள்ளது. மேலும், இம்மார்டலிஸ் ஜி925 எம்சி12 (Immortalis G925 MC12) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கிறது. கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) உள்ளது. 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே உள்ளது.

144 Hz ரெஃப்ரெஷ் ரேட், 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 100W சூப்பர் பிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6700mAh பேட்டரியை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. ஓஐஎஸ், ஆட்டோ போகஸ் மற்றும் 20X டிஜிட்டல் ஜிமிங் கிடைக்கிறது.

16 எம்பி செல்பீ கேமராவை இந்த ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா போன் கொடுத்துள்ளது. எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-axis Linear Motor), ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் (Stereo Dual Speakers) கொண்டுள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,000 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, ஏஸ் அல்ட்ரா 6 மாடல் ரூ.35,999 பட்ஜெட்டில் கிடைக்கலாம். இது சீன யுவானின் அடிப்படையிலான விலையாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 6 Ultra With 165Hz Refresh Rate Display MediaTek Dimensity 9500 Chipset Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X