நாளை களமிறங்கும் புதிய ஒன்பிளஸ் போன்.. 8600mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. IP69K ரேட்டிங்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா (OnePlus Ace 6 Ultra) ஸ்மார்ட்போன் நாளை (ஏப்ரல் 28) சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் விரைவில் உலக சந்தையிலும், இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா அம்சங்கள் ( OnePlus Ace 6 Ultra specifications): 6.78-இன்ச் பிளாட் LTPS BOE டிஸ்பிளே உடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மர்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் இந்த போன் வெளிவரும்.
மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் (MediaTek Dimensity 9500 chipset) உடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதுவும் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த அசத்தலான ஒன்பிளஸ் போன் வெளியாகும். குறிப்பாக இந்த போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

டிசிஎஸ் டூயல் symmetrical 1115W ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 8600எம்ஏஎச் பேட்டரி உடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 218 கிராம் ஆகும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications