Home
Mobile

OnePlus ஒரே போடு.. OLED டிஸ்பிளே.. 8500mAh பேட்டரி.. 50MP கேமரா.. புது Ace ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஒன்பிளஸ் பிரியர்களும் எதிர்பார்த்து கொண்டிருந்த அறிவிப்பு வந்துவிட்டது. ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா (OnePlus Ace 6 Ultra) ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பீச்சர்களும் கசிந்துள்ளன. இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

லி ஜீ லூயிஸ் (ஒன்பிளஸ் சீனா தலைவர்) அடுத்த ஏஸ் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது. கடந்த மே மாதம் ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா வெளியாகியது. ஆகவே, ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா இந்த மே மாதத்தில் வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

OnePlus ஒரே போடு.. OLED டிஸ்பிளே.. 8500mAh பேட்டரி.. 50MP கேமரா!

ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா அம்சங்கள் (OnePlus Ace 6 Ultra Specifications): 6.8 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. மேலும், 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டுயல் ரியர் கேமரா செட்டப் கிடைக்க உள்ளது.

4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி எதிர்பார்க்கலாம். மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. 8500mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் விவரங்கள் கசியவில்லை.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. பிளாக் (Black) மற்றும் டைட்டானியம் (Titanium) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ள முந்தைய வெர்ஷனாக இருக்கும் ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா (OnePlus Ace 5 Ultra) ஸ்மார்ட்போனின் பீச்சர்களை பார்க்க வேண்டும். அதேபோல பட்ஜெட் செக்மெண்ட்டையும் முந்தைய வெர்ஷனை வைத்து யூகிக்க முடியும். ஆகவே, இந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ 3என்எம் (MediaTek Dimensity 9400+ 3nm) சிப்செட் கிடைக்கிறது. இம்மார்டலிஸ் ஜி925 எம்சி12 ஜிபியு (Immortalis G925 MC12) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே உள்ளது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன், 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது.

1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. கிட்டத்தட்ட இதே டிஸ்பிளே பீச்சர்களை ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம். ரெஃப்ரெஷ் ரேட் அல்லது பீக் பிரைட்ன்ஸ் பீச்சர்களில் மாற்றம் இருக்கும். 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6700mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது.

இதே ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா கிடைக்குமா என்பது தெரியவில்லை. அதிக பேட்டரி கேபாசிட்டி மாடலுக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.

இந்த டூயல் ரியர் கேமரா செட்டப்பானது, ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா மாடலிலும் கிடைக்கும். சீன மார்கெட்டில் கடந்த மே மாதத்தில் ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா வெளியாகியது. ஆகவே, இந்த மே மாதத்தில் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். ரூ.30,000 பட்ஜெட்டில் ஏஸ்5 அல்ட்ரா கிடைத்தது. ஆகவே, ரூ.35,000 பட்ஜெட்டில் ஏஸ்6 அல்ட்ரா கிடைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 6 Ultra Officially Teased in China Ahead Of Launch Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X