Home
Mobile

அடுத்த வாரம் உறுதி.. 7800mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) மற்றும் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன்கள் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் ஒன்பிளஸ் ஏஸ் 6 போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.

ஒன்பிளஸ் ஏஸ் 6 அம்சங்கள் (OnePlus Ace 6 specifications): ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் மற்றும் 8எம்பி அல்ட்ரா வைடு கேமராக்கள் உள்ளன. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

அடுத்த வாரம் உறுதி.. வருகிறது புதிய OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

6.85-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் டால்பி விஷன், எச்டிஆர் பிளஸ், எச்டிஆர் விவிட், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

தரமான ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 2 (Snapdragon 8 Elite Gen 2) சிப்செட் உடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் 6 அறிமுகம் செய்யப்படும். மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அடிப்படையாகக் கொண்டு ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த போனில் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல அம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த வாரம் உறுதி.. வருகிறது புதிய OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

7800mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 போன் அறிமுகமாகும். மேலும் சில்வர், பிளாக், ஒயிட் நிறங்களில் இந்த போன் வெளிவரும். அதேபோல் ஒன்பிளஸ் ஏஸ் 6 போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட சில வாரங்களில் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) எனும் பெயரில் இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 6 specifications leaked ahead of launch next week: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X