Home
Mobile

மடார்னு அடிச்ச புது OnePlus போன்.. 8000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ மேக்ஸ் (OnePlus Ace 6 Pro Max) மாடலின் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் விவரங்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே, 8000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎஸ்இடி டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் போன்ற பீச்சர்கள் கசிந்தன. இப்போது, மீதமுள்ள பீச்சர்கள் கசிய தொடங்கி இருக்கின்றன. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை மற்றும் வெளியீட்டு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஆகிய மாடல்கள் சீன மார்கெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்து, அதன் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அப்படியென்ன பீச்சர்கள் இருக்கிறது.

மடார்னு அடிச்ச புது OnePlus போன்.. 8000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்!

ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (OnePlus Ace 6 Pro Max Specifications): இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்கள் வர இருக்கிறது. 256 ஜிபி மெமரி, 512 ஜிபி மெமரி மற்றும் 1 டிபி மெமரி கிடைக்க இருக்கிறது. மூன்று கலர்கள் இருக்கின்றன.

ஆகவே, ஃபிளாஷ் பிளாக் (Flash Black), எலக்ட்ரிக் பர்பிள் (Electric Purple) மற்றும் ஷேடோ கிரீன் (Shadow Green) ஆகிய கலர்களில் வர இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ மேக்ஸ் மாடலானது, முன்னதாக ஒன்பிளஸ் ஏஸ் 6 டர்போ (OnePlus Ace 6 Turbo) மாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போதே முக்கிய பீச்சர்களும் கசிந்துவிட்டன.

இந்த பீச்சர்களை பார்க்கையில், 6.7 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8,000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. மேலும், கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க இருக்கிறது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது. மெட்டல் மிடில் பிரேம் கொண்ட பாடி கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே இதுவரையில் கசிந்துள்ளன. சீன மார்கெட்டில் ஓரிரு மாதங்களில் வெளியாக இருக்கிறது.

குளோபல் மார்கெட் வெளியீடு இதற்கு அடுத்து இருக்கும். முன்னதாக வெளியான ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதிலிருந்து மேக்ஸ் மாடலில் அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்கள் கிடைக்கும் என்பதால், இதை பார்க்க வேண்டி இருக்கிறது. இதில் 6.8 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 165Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் பேஸ்டு கலர்ஓஎஸ் 16 கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. ஓஐஎஸ் மற்றும் 4K ரெக்கார்டிங் கிடைக்கிறது.

120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7800mAh பேட்டரி கிடைக்கிறது. இன்பிராரெட் சென்சார், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. IP66 + IP68 + IP69 + IP69K ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ரூ.33,000 பட்ஜெட்டில் வெளியாகியது. ஆகவே, ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ மேக்ஸ் ரூ.40,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 6 Pro Max With 12GB RAM Snapdragon 8 Gen 5 Launch Soon Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X