Home
Mobile

ஆத்தாடி ஆத்தா.. 8000mAh பேட்டரி உடன் புது Pro Max மாடல்.. OnePlus கிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஆ!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் ஆனது ஒரு புதிய ப்ரோ மேக்ஸ் (Pro Max) மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அது ஒரு பெர்ஃபார்மென்ஸ் ஃபோகஸ்டு பிளாக்ஷிப் (Performance-focused flagship) ஸ்மார்ட்போன் ஆக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எந்த மாடல்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? எப்போது அறிமுகமாகும்?

எந்த மாடல்? ஆன்லைனில் லீக் ஆன ஒரு ரீடெயில் பாக்ஸ் வழியாக ஒன்பிளஸ் நிறுவனமானது ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ மேக்ஸ் (OnePlus Ace 6 Pro Max) என்கிற புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யலாம் என்று தெரிய வந்துள்ளது.

OnePlus: 8000mAh பேட்டரி உடன் புது Pro Max மாடல்!

இது கடந்த மாதம் சீனாவில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடன் அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) உடன் ஒப்பிடும்போது இது சிறந்த செயல்திறனை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் இது "ப்ரோ மேக்ஸ்" என்கிற பெயரை கொண்டுள்ளது.

எது ஒன்பிளஸ் 15ஆர் ஆக இந்தியாவிற்கு வரும்? நேற்று வரையிலாக ஒன்பிளஸ் 15 உடன் சேர்ந்து சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் 6 மாடல் ஆனது ரீபிராண்டிங் செய்யப்பட்டு, அதே ஒன்பிளஸ் 15 உடன் ஒன்பிளஸ் 15ஆர் என்கிற பெயரின் கீழ் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ மேக்ஸ் மாடலின் அறிமுகம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால்.. இவ்விரு மாடல்களில் எது ஒன்பிளஸ் 15ஆர் ஆக உலக சந்தைகளில் அறிமுகமாகும் என்கிற குழப்பம் மேலோங்கியுள்ளது. எது ஒன்பிளஸ் 15ஆர் ஆக வந்தாலும் நமக்கு லாபம் தான். ஏனென்றால் இரண்டுமே கேமிங் மற்றும் பெர்ஃபார்மென்ஸ்-ஐ மையமாக கொண்ட மாடல்கள் தான்.

என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் மூலம் இயங்கலாம். இது உண்மையாகும் பட்சத்தில் - ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ மேக்ஸ் ஆனது உலகின் முதல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 ஸ்மார்ட்போனாக இருக்கும்

சமீபத்தில் 8000mAh பேட்டரி (8000mAh Battery) உடனான ஒன்பிளஸ் டர்போ (OnePlus Turbo) என்கிற ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆனது, ஒருவேளை ஒன்பிளஸ் டர்போ மாடல் ஆனது ஒன்பிளஸ் ஏஸ் 6 ப்ரோ மேக்ஸ் மாடலாக கூட இருக்கலாம்.

ஒன்பிளஸ் டர்போ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்?
- 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 5 ஜென் சிப்செட் (Snapdragon 8 Gen 5 SoC)
- 50Mஎம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 8எம்பி அல்ட்ராவைட் கேமரா

- எக்ஸ்-ஆக்சிஸ லீனியர் வைப்ரேஷன் மோட்டார் (X-axis linear vibration motor)
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- என்எப்சி (NFC) ஆதரவு
- அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 100W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 8000mAh பேட்டரி

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் எப்போது? என்ன விலைக்கு வரலாம்? ஒன்பிளஸ் 15 ஆனது வருகிற நவம்பர் 13 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சீனாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.50,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ரூ.65,000 - ரூ.75,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 6 Pro Max Could be first Phone Launch With Snapdragon 8 Gen 5 Chipset Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X