120W இலவச சார்ஜர் உடன் 7800mAh பேட்டரி.. இப்படி ஒரு OnePlus போனுக்கு தான் உலகமே வெயிட்டிங்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் 15 மட்டுமே ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் "அடுத்த ஸ்மார்ட்போன் அல்ல". ரூ.70,000 - ரூ.75,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் ஒரு ஸ்மார்ட்போன் நிச்சயம் அனைவருக்குமான ஸ்மார்ட்போனாக இருக்காது.
ஆகையால் தான் ஒன்பிளஸ் நிறுவனமே கூட ஒன்பிளஸ் 15 உடன் சேர்த்து "பட்ஜெட் வாசிகளுக்கான" ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடலையும் அறிமுகம் செய்கிறது. அதாவது ஒன்பிளஸ் 15ஆர் மாடலை எதிர்நோக்கும் ஒரு பட்டாளமும் இங்கே இருக்கிறது என்று அர்த்தம். அப்படிப்பட்டவர்களுக்கான சில அட்டகாசமான அப்டேட்கள் இதோ:

முதல் மற்றும் முக்கியமான அப்டேட்: இந்த மாத இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் உடன் சேர்த்து ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற பேச்சுக்கள் அடிபட தொடங்கி உள்ளன.
அறியாதோர்களுக்கு, சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஆக வரும் மாடல் தான் இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் ஆக வரும். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் ஏஸ் 5 தான் இங்கே ஒன்பிளஸ் 13ஆர் ஆக அறிமுகமானது. ஆக இந்தியாவில் ஒன்பிளஸ் 15 அறிமுகம் செய்யப்படும் போது அதனுடன் ஒன்பிளஸ் 15ஆர் மாடலும் சேர்ந்து அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு - பிரகாசமாகி கொண்டே போகிறது
இரண்டாவது அப்டேட்: சீனாவில் 3சி சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ள ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் லிஸ்டிங் ஆனது இது 120W பாஸ்ட் சார்ஜருடன் அனுப்பப்படலாம் என்பதை வெளிப்படுத்துகிறது. ஆக 120W பாஸ்ட் சார்ஜிங் திறன் இருப்பது "கிட்டத்தட்ட"உறுதி செய்யப்பட்டுள்ளது
அடுத்தடுத்த அப்டேட்கள்: ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்லது ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் லீக் ஆன அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1.5கே ரெசல்யூஷனை ஆதரிக்கும் BOE OLED டிஸ்பிளே இடம்பெறலாம். இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் ஆதரவுடன் வரலாம்
சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை பேக் செய்யலாம். பேட்டரி டிப்பார்ட்மென்ட்டை பொறுத்தவரை இது 120W பாஸ்ட் சார்ஜிங்குடன் 7,800mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது ஒரு மெட்டல் மிடில் ஃபிரேம் டிஸைனுடன் ஐபி68 ரேட்டிங்கை பெறலாம். கடைசியாக இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ்16 (ColorOS 16) கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி அப்டேட்: ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம்: இந்தியாவில் இது ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் (ஸ்மார்ட்ப்ரைஸ் வலைத்தளத்தின்படி) இது ரூ.44,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். எப்படி பார்த்தாலும் ரூ.80,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வருமென எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 15-ஐ விட "கிட்டத்தட்ட" பாதி விலைக்கு வரலாம்!
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது பிஓஇ-யின் மூன்றாம் தலைமுறை ஓரியண்டல் டிஸ்பிளே (BOE's third-generation Oriental Display) உடனான உலகின் முதல் 165 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி ஸ்க்ரீனை (165Hz OLED screen) கொண்ட ஸ்மார்ட்போனாக அறிமுகமாக உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உட வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சிப்செட்டால் தான் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது இந்தாண்டு முன்கூட்டியே அறிமுகமாகிறது. ஏனென்றால் ரியல்மி மற்றும் ஐக்யூ ஆகிய 2 "போட்டியாளர்" நிறுவனங்களும் இதே சிப்செட் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் 15 க்கு முன்னதாகவே அறிமுகம் செய்ய உள்ளன. ஆகவே வேறு வழி இல்லாமல் டிசம்பர் வாக்கில் அறிமுகம் செய்யப்படவிருந்த ஒன்பிளஸ் 15 இந்த அக்டோபர் மாதமே அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








