மொத்த சாம்ராஜ்யமே இந்த ஒத்த போனுக்கு வெயிட்டிங்.. 120W சார்ஜிங்.. 7800mAh பேட்டரி.. OIS கேமரா.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) ஸ்மார்ட்போன் இன்று வெளியாக இருக்கிறது. இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடலாக வெளியாக இருக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 7800mAh பேட்டரி, ஓஐஎஸ் கேமரா மட்டுமல்லாமல், பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஆகிய ஸ்மார்ட்போன்கள் சீன மார்கெட்டில் இன்று வெளியாக இருக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு வெளியீட்டு நிகழ்வு தொடங்க இருக்கிறது. இதில் பேட்டரி மற்றும் பர்ஃபாமென்ஸ் பீச்சர்களில் ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. இந்திய உள்பட மற்ற மார்கெட்களில் ஒன்பிளஸ் 15ஆர் மாடலாக வருகிறது.

இதனாலேயே அந்த போனின் வெளியீட்டின் மீது ஒட்டுமொத்த கவனமும் சென்றுள்ளது. டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி, ஐபி ரேட்டிங் மற்றும் டிசைன் உள்ளிட்ட முக்கால்வாசி பீச்சர்கள் ஏற்கனவே உறுதியாகிவிட்டன. மீதமுள்ள பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் வெளியாகும் முன்பு அதில் என்னென்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் ஏஸ் 6 அம்சங்கள் (OnePlus Ace 6 Specifications): இதுவொரு பிரீமியம் பர்ஃபாமென்ஸ் மாடலாக இருப்பதால், கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பீச்சர்களை பார்க்க முடிகிறது. ஆகவே, 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் வர இருக்கிறது.
அதேபோல ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கிடைக்க இருக்கிறது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) வர இருக்கிறது. ஆகவே, அப்கிரேடட் யுஐ எதிர்பார்க்கலாம்.
இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் 120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7800mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு பிரத்யேக டெக்னாலஜிகள் கொடுக்கப்பட இருக்கிறது. விசி கூலிங் சிஸ்டம் மற்றும் ஓவர் சார்ஜிங் கன்ட்ரோல்கள் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்களில் பிரீமியம் ஐபி ரேட்டிங் எதிர்பார்க்க முடியாது.
ஆனால், இந்த ஸ்மார்ட்போனில் IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistant) கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் முதல் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்டவேரியண்ட் வரையில் வெளியாக இருக்கிறது. குயிக் சில்வர் (Quick Silver), ஃபிளாஷ் ஒயிட் (Flash White) மற்றும் ரேசிங் பிளாக் (Racing Black) ஆகிய கலர்கள் இருக்கின்றன. விலை விவரங்கள் கசியவில்லை. இருப்பினும், ரூ.50,000 பட்ஜெட்டுக்குள் (இந்தியாவில்) வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








