உலகமே இந்த OnePlus 5ஜி போனுக்கு தான் வெயிட்டிங்.. 7800mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் ஏஸ் 6 (OnePlus Ace 6) ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 27-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும். இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியா மற்றும் உலக சந்தையில் ஒன்பிளஸ் 15ஆர் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் ஏஸ் 6 அம்சங்கள் (OnePlus Ace 6 specifications): ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 2 (Snapdragon 8 Elite Gen 2) சிப்செட் உடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + அல்ட்ரா வைடு லென்ஸ் + டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Snapdragon 8 Elite Gen 2) வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் 6 அறிமுகம் செய்யப்படும். மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அடிப்படையாகக் கொண்டு ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த போனில் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
7800mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








