மார்க்கெட்டே திணறப்போகுது.. 7000mAh பேட்டரி, OLED டிஸ்பிளே.. அடுத்த OnePlus போன் ரெடி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அடுத்து ஒன்பிளஸ் ஏஸ் 5எஸ் (OnePlus Ace 5S) போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆன்லைனில் கசிந்த தகவலின்படி இந்த புதிய போன் வரும் 2025 மே மாதம் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த போன் முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்பு இந்தியா மற்றும் உலக நாடுகளில் ஒன்பிளஸ் ஏஸ் 5எஸ் போன் ஆனது வேறு பெயரில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் ஏஸ் 5எஸ் போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் 5எஸ் அம்சங்கள் (OnePlus Ace 5S specifications): 6.83-இன்ச் பிளாட் LTPS OLED டிஸ்பிளே வசதியுடன் ஒன்பிளஸ் ஏஸ் 5எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிளஸ் (MediaTek Dimensity 9400+) சிப்செட் உடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ஒன்பிளஸ் ஏஸ் 5எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒன்பிளஸ் ஏஸ் 5எஸ் போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 7000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் ஏஸ் 5எஸ் போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W சார்ஜிங் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளம், 5ஜி, 4ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் ஒன்பிளஸ் ஏஸ் 5எஸ் போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








