OnePlus விஸ்வரூபம்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 6415mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
மெட்டல் ஃபிரேம் பாடியில் கிராவிட்டி டைட்டானியம் டிசைனில் பிரீமியம் லுக் கொடுப்பது மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 80W சார்ஜிங், 6415mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் ஒன்பிளஸ் ஏஸ் 5 (OnePlus Ace 5) களமிறங்கி இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருந்தும், இந்தியாவில் இருக்கும் ஒன்பிளஸ் பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டு வைத்துள்ளது. விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 5 போனின் முழு விவரங்கள் இதோ.
ஒன்பிளஸ் ஏஸ் 5 அம்சங்கள் (OnePlus Ace 5 Specifications): மெட்டல் ஃபிரேம் பாடியில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. கிராவிட்டி டைட்டானியம் (Gravity Titanium), ஃபுல் ஸ்பீடு பிளாக் (Full Speed Black) மற்றும் செலஸ்டியல் போர்ஸ்லைன் கிரீன் (Celestial Porcelain Green) கலர்களில் கிடைக்க இருக்கிறது. கிரீன் கலர் வேரியண்ட் செராமிக் மெட்டீரியல் எடிஷனாகும்.

இந்த டிசைனில் கன்ட்ரோல் ஸ்விட்ச் கிடைக்கிறது. இந்த ஸ்விட்ச் மூலம் சைலெண்ட், வைப்ரேட் மற்றும் ரிங் கன்ட்ரோல்களை ஒன்-டச்சில் ஸ்விட்ச் செய்து கொள்ளலாம். இந்த ஒன்பிளஸ் போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (4nm Octa Core Snapdragon 8 Gen 3 SoC) சிப்செட் கிடைக்கிறது.
மேலும், கலர்ஓஸ் 15 (ColorOS 15) மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. டியாகங் கூலிங் எலைட் (Tiangong Cooling Elite) ஹீட் கன்ட்ரோல் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு கம்போர்ட் கொடுக்கும். 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஓப்போ நிறுவனத்தின் கிரிஸ்டல் சீல்டு கிளாஸ் (Crystal Shield Glass) பாதுகாப்பை கொடுத்து இருக்கிறது. P3 கலர் காமட், 1.07 பில்லியன் கலர் டெப்த் உள்ளது.

இந்த ஒன்பிளஸ் ஏஸ் 5 போனில் 20X டிஜிட்டல் ஜூமிங், ஆட்டோ போகஸ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுடன் 8 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. இந்த மூன்று கேமராக்களிலும் பட்டையை கிளப்பும் சென்சார்கள் பேக் செய்யப்பட்டுள்ளன.
ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சார் மெயின் கேமராவிலும், சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் அல்ட்ரா வைடு கேமராவிலும், ஓம்னிவிஷன் ஓவி02பி (OmniVision OV02B) சென்சார் மேக்ரோ கேமராவிலும் கிடைக்கிறது. மெயின் கேமராவிலும் கூடுதலாக ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
16 எம்பி செல்பீ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் இருக்கிறது. 6415mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் சார்ஜிங் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,830ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட செராமிக் மாடலின் விலை ரூ.40,835ஆக இருக்கிறது. டிசம்பர் 31ஆம் தேதி சீனாவில் விற்பனை தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications








