மே 27-க்கு முரட்டு OnePlus.. வருது 100W சார்ஜிங்.. 6700mAh பேட்டரி.. SONY கேமரா.. 16GB ரேம்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஒன்பிளஸ் பிரியர்களையும் மரண வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா எடிஷன் (OnePlus Ace 5 Ultra Edition) வரும் மே 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி, டிசைன், கலர், வேரியண்ட்கள் போன்ற பீச்சர்கள் வெளியாகி மார்கெட்டை அதிரவிட்டது. இப்போது கேமரா பீச்சர்கள் வெளியாகி மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பிரீமியம் மாடலான இந்த ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா எடிஷன் போனில் என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்.
சீன மார்கெட்டில் மே 27ஆம் தேதியில் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா எடிஷன் மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷன் (OnePlus Ace 5 Racing Edition) ஆகிய மாடல்கள் வெளியாக இருக்கிறது. இதனிடையே அந்த மாடல்களின் பீச்சர்கள் மார்கெட்டில் வெளியாகி, இந்தியாவில் இருக்கும் ஒன்பிளஸ் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் வைத்துள்ளது. இதில் அல்ட்ரா எடிஷன் தனி கவனம் பெற்றுள்ளது.

ஏனென்றால், ஆக்டா கோர் மீடியாடெக் 9400பிளஸ் (Octa Core MediaTek Dimensity 9400+) சிப்செட் கொண்ட மாடலாக இது வெளியாக இருக்கிறது. பிரீமியம் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கும்படியான பர்ஃபாமென்ஸ் மற்றும் ஜிபியு கொண்ட சிப்செட்டாக இது இருக்கிறது. ஆகவே, இந்திய பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முழு பீச்சர்கள் எப்படி?
ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா எடிஷன் (OnePlus Ace 5 Ultra Edition Specifications): இதுவொரு கேமிங் மாடலாக இருப்பதால், மீடியாடெக் டைமன்சிட்டி 9400பிளஸ் சிப்செட் மட்டுமல்லாமல், லிங்க்சி டச் கன்ட்ரோல் சிப் (Lingxi Touch Control Chip), ஜி2 கேமிங் சிப் கிடைக்கிறது. இதன் மூலம் 3000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120FPS கேமிங் அவுட்புட் கிடைக்கிறது. ஆகவே, ஈஸ்போர்ட்ஸ் டிஸ்பிளே எதிர்பார்க்கலாம். பிரீஸ் ப்ளூ (Breeze Blue), டைட்டானியம் பிளேஸ் (Titanium Blaze) மற்றும் பாண்டம் பிளாக் (Phantom Black) ஆகிய மூன்று கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா எடிஷனில் 5 வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன.
ஆகவே, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. இதுபோக 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் கிடைக்க இருக்கிறது.
கேமராவை பொறுத்தவரையில், டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்க இருக்கிறது. இதில் 50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சார் கிடைக்கிறது. இந்த சிப்செட், டிஸ்பிளே மற்றும் கேமராவுக்கு ஏற்ப பேக்கப் கொடுக்கும்படி 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6700mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது.
மேற்கண்ட பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது. சீன வெளியீட்டுக்கு பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா எடிஷனுக்கு வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








