Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.21,325 போதும்.. 7100mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. எந்த மாடல்?

ஓட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் அதிரும்படியான பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 7100mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷன் (OnePlus Ace 5 Racing Edition) போனானது வெளியாகி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ சிப்செட் கொடுக்கிறது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷன் போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாடல்களாக ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷன் மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா எடிஷன் (OnePlus Ace 5 Ultra Edition) ஆகியவை சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. இதில் ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷன் பட்ஜெட்டில் வெளியாகி இருப்பதால், சீன மட்டுமல்லாமல், இந்தியாவில் இருக்கும் ஒன்பிளஸ் பிரியர்களையும் மிரளவிட்டுள்ளது.

யாரு சாமி அவன்.. ரூ.21,325 போதும்.. 7100mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷன் அம்சங்கள் (OnePlus Ace 5 Racing Edition Specifications): கேமிங் மாடலாக இருப்பதால், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 9400e 4nm) சிப்செட் மற்றும் ஆர்ம் இம்மார்டலிஸ் ஜி72 ஜிபியு (ARM Immortalis G72 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இதுபோக கூடுதல் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்க 2 சிப்கள் கிடைக்கின்றன.

ஆகவே, லின்ங்ஸி டச் சிப் (Lingxi Touch Chip) மற்றும் வை-பை ஜி1 (Wi-Fi G1) கிடைக்கிறது. இதன் மூலம் டச் கன்ட்ரோல் மற்றும் கனெக்டிவிட்டியில் லேக்-ப்ரீ அவுட்புட் கிடைக்கும். ஏஐ பீச்சர்களுடன் கலர்ஓஸ் 15 (ColorOS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி உள்ளது.

மேலும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் போனில் 50 எம்பி வைடு-ஆங்கிள் மெயின் கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கிடைக்கிறது. வைடு ஆங்கிள் கேமராவில் ஓஐஎஸ் டெக்னாலஜி, ஆட்டோ போகஸ், 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 20X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது.

யாரு சாமி அவன்.. ரூ.21,325 போதும்.. 7100mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

1080P ரெசொலூஷன் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 80W சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் (Super Flash Charge) சப்போர்ட் கொண்ட பேட்டரி கிடைக்கிறது. இதற்கு பைபாஸ் பவர் சப்ளை சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல விசி கூலிங் சிஸ்டம் வருகிறது. 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே உள்ளது. இதில் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 387 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

மேலும், இந்த டில்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், PWM மற்றும் DC டிம்மிங் சப்போர்ட் கிடைக்கிறது. வேவ் ஒயிட் (Wave White), வைல்டு கிரீன் (Wild Green) மற்றும் ராக் பிளாக் (Rock Black) கலர்களில் கிடைக்க இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,325ஆக இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,250ஆகவும் இருக்கிறது.

Take a Poll

16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,880ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,625ஆகவும் இருக்கிறது. இந்த விலை விவரங்கள் சீனாவின் யுவான் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, மாற்றங்கள் இருக்கலாம். அதேபோல சீனாவில் விற்பனை தொடங்கிவிட்டது. குளோபல் மற்றும் இந்திய வெளியீடு ஓரிரு வாரங்களில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 5 Racing Edition With 12GB 50MP Camera Launched in China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X