OnePlus-ன் புதிய மினி 5G போன்.. சின்ன டிஸ்பிளே ஆனா லேட்டஸ்ட் Snapdragon 8 Elite சிப்செட், 50MP சோனி கேமரா!
ஆப்பிள் நிறுவனம் எப்படி பல்வேறு வகையான டிஸ்பிளே அளவுகளில் ஐபோன்களை அறிமுகம் செய்கிறதோ, அதை ஒன்பிளஸ் நிறுவனமும் செய்ய விரும்புவது போல் தெரிகிறது. ஒன்பிளஸ் நிறுவனமானது சற்றே சிறிய டிஸ்பிளே உடனான புதிய மினி ஸ்மார்ட்போனை, கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது.
அது ஒன்பிளஸ் ஏஸ் 5 மினி (OnePlus Ace 5 Mini) ஸ்மார்ட்போனாகும். சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 5 (OnePlus Ace 5) ஆக அறிமுகமாகும் மாடல் தான் இந்தியாவில் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஆக அறிமுகம் செய்யப்படும் என்பது "கிட்டத்தட்ட" உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் ஒன்பிளஸ் ஏஸ் 5 மினி மாடல் இந்திய சந்தையில் நோர்ட் சீரீஸின் (Nord Series) கீழ் செய்யப்படுமா அல்லது இது மற்ற ஏஸ் சீரிஸ் மாடல்களை போல சீனாவிற்கு மட்டுமே பிரத்யேகமான மாடலாக இருக்குமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எப்படி இருந்தாலும் இது முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும். ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக எதையுமே உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட, ஒன்பிளஸின் இந்த மினி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளன
டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் ஏஸ் 5 மினி ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் உடனான சற்றே சிறிய 6.3-இன்ச் கஸ்டம்-மேட் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் 5 மினி ஸ்மார்ட்போன் ஆனது கிடைமட்டமாக பொருத்தப்பட்ட ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். அதாவது இது கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களின் கேமரா மாட்யூல்களை போன்ற வடிவமைப்பை பெறலாம். அதில் 50 மெகாபிக்சல் சோனி IMX906 ப்ரைமரி சென்சார் இடம்பெறலாம்; ஆனால் பெரிஸ்கோப் லென்ஸை எதிர்பார்க்கமுடியாது
இதுதவிர்த்து ஒன்பிளஸ் ஏஸ் 5 மினி ஸ்மார்ட்போனிற்காக ஷார்ட்-ஃபோகஸ் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் சோதிக்கப்படுவதாகவும், இதில் சிங்கிள்-பாயிண்ட் அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் பேக் செய்யப்படலாம் என்றும் டிப்ஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க உறுதியான விவரங்கள் கிடைக்கும் வரை, ஒன்பிளஸ் ஏஸ் 5 மினி பற்றிய அனைத்து தகவல்களையும் மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் ஒன்பிளஸ் நிறுவனம் இப்படி ஒரு மினி மாடலின் அறிமுகம் குறித்து வாய் திறக்கவே இல்லை. இப்போதைக்கு 2024 டிசம்பரில் ஒன்பிளஸ் ஏஸ் 5 மற்றும் ஏஸ் 5 ப்ரோ ஆகிய 2 மாடல்களின் வருகை மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்லது ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? இது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.78 இன்ச் டிஸ்பிளேவுடன் வரும். மேலும் இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎஃப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்யலாம்.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 8 மெகாபிக்சல் செக்கண்டரி சென்சார் + 2 மெகாபிக்சல் ஷூட்டர் ஆகியவைகள் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6000mAh பேட்டரியுடன் அனுப்பப்படலாம்
ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்லது ஒன்பிளஸ் 13ஆர் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்; இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








