போட்றா வெடிய.. அடேங்கப்பா விலையில் புதிய OnePlus போன்.. பெரிய 6415mAh பேட்டரி.. பெரிய 6.78-இன்ச் டிஸ்பிளே!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் 2 புதிய ஸ்மார்ட்போன்களை இன்று (டிசம்பர் 12) அறிமுகம் செய்யவுள்ளது. அது ஒன்பிளஸ் ஏஸ் 5 (OnePlus Ace 5) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ப்ரோ (OnePlus Ace 5 Pro) மாடல்கள் ஆகும். இதில் வெண்ணிலா மாடலான ஒன்பிளஸ் ஏஸ் 5 ஆனது, வரும் மாதங்களில் இந்தியாவில் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஆக அறிமுகம் செய்யப்படும்.
இதற்கிடையில் ஒன்பிளஸ் ஏஸ் 5 (அல்லது ஒன்பிளஸ் 13ஆர்) மாடலின் டிஸ்பிளே மற்றும் பேட்டரி குறித்த விவரங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன. அதன்படி ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 6,415mAh பேட்டரியை கொண்டிருக்கும். இது முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் 3 (அல்லது ஒன்பிளஸ் 12ஆர்) ஸ்மார்ட்போனில் இருந்ததை விட பெரிய பேட்டரி ஆகும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.78-இன்ச் BOE X2 8T LTPO டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் இடம்பெற்ற 120ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் ஓரியண்டல் AMOLED LTPO டிஸ்பிளேவுடன் ஒப்பிடும் போது, ஒரு நல்ல முன்னேற்றம் ஆகும்.
நினைவூட்டும் வண்ணம் சீனாவில் அறிமுகமாகி, இந்திய அறிமுகத்திற்காக காத்திருக்கும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் உயர்நிலை BOE X2 டிஸ்பிளே உள்ளது. ஒன்பிளஸ் ஏஸ் 5 (அல்லது ஒன்பிளஸ் 13ஆர்) ஸ்மார்ட்போனின் பாஸ்ட் சார்ஜிங் திறனை பொறுத்தவரை, இது 80W சார்ஜிங் ஆதரவுடன் வரலாம். ஒன்பில்ஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனில் 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருந்தாலும் கூட , அது சிறிய 5,500mAh பேட்டரியை தான் கொண்டுள்ளது.
இதுதவிர்த்து, ஒன்பிளஸ் ஏஸ் 5 (அல்லது ஒன்பிளஸ் 13ஆர்) ஸ்மார்ட்போனில் மெட்டல் மிடில் ஃப்ரேம், கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் மற்றும் செராமிக் பாடி ஆகியவைகளும் இடம்பெறும் என்பது போல் தெரிகிறது. எல்லாவற்றை விட சுவாரசியமாக இதில் தேர்ட்-ஸ்டேஜ் அலெர்ட் ஸ்லைடர் பொருத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
2025 ஜனவரி மாத வாக்கில் இந்தியாவிற்கு வரும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168×1440 பிக்சல்ஸ், 1-120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி PWM டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82-இன்ச் 2கே+ LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை இது 900MHz அட்ரெனோ 830 ஜிபியு உடன் 4.32GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸரை கொண்டுள்ளது. இது 12ஜிபி / 16ஜிபி / 24ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி / 512ஜிபி / 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது
கேமராக்களை பொறுத்தவரை இது 1/1.4-இன்ச் சோனி LYT-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் JN1 சென்சார், எப்/2.2 அபெர்க்ஷர் 3.5செமீ மேக்ரோ உடனான 50எம்பி கேமரா + 1/1.95-இன்ச் LYT600, எப்/2.6அபெர்க்ஷர், ஓஐஎஸ், 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் ஹசல்பிளாட் (Hasselblad) கேமரா செட்டப் ஆனது 4கே 60fps வரை மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும். முன்பக்கத்தில் சோனி IMX615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா (எப்/2.4 அபெர்க்ஷர், 4கே வரை 30 fps வீடியோ ரெக்கார்டிங்) உள்ளது
பேட்டரியை பொறுத்தவரை இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், அகச்சிவப்பு சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 + IP69 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது
இந்தியாவில் ஒன்பிளஸ் 13ஆர் மற்றும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.54,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 13 ஆனது இந்தியாவில் சுமார் ரூ.70,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications