Home
Mobile

கண்ணா 2வது லட்டு வேணுமா.. வச்சி செய்ய போகும் OnePlus.. 6000mAh பேட்டரி, 1.5K டிஸ்பிளேவுடன் 2 புதிய மாடல்கள்!

OnePlus Upcoming Phones: 2024 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஆனது எதிர்பார்ப்பதை விட முன்கூட்டியே (2 மாதங்களுக்கு முன்பாகவே) அறிமுகமாகும் என்கிற தகவலை தொடர்ந்து, அதோடு சேர்த்து.. இந்தாண்டில் மேலும் 2 புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது. அதென்ன மாடல்கள்? அவைகள் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரிஸ் (OnePlus Ace 5 Series) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். இது கூடிய விரைவில் சீனாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் சீரீஸின் (OnePlus Ace Series) கீழ் வெளியாகும் மாடல்கள் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் ஆர் சீரீஸ் (OnePlus R Series) மாடல்களாக அறிமுகமாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

OnePlus: 6000mAh பேட்டரி, 1.5K டிஸ்பிளேவுடன் 2 புதிய மாடல்கள்!

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) என்கிற பெயரில் சீனாவில் அறிமுகமான மாடல், உலக சந்தைகளில் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஆக அறிமுகமானது. சில ஆசிய கலாச்சாரங்களில் 4 என்கிற எண் எதிர்மறையான சகுனமாக கருதப்படுகிறது.

ஆகையால் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் ஏஸ் 4 (OnePlus Ace 4) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 4 ப்ரோ (OnePlus Ace 4 Pro) மாடல்களை தவிர்த்துவிட்டு நேரடியாக ஒன்பிளஸ் ஏஸ் 5 (OnePlus Ace 5) மற்றும் ஒன்பில்ஸ் ஏஸ் 5 ப்ரோ (OnePlus Ace 5 Pro) மாடல்களை அறிமுகம் செய்கிறது. இதிலொரு மாடல் - சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளில் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஆக அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி, ஒன்பிளஸ் ஏஸ் 5 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ப்ரோ ஆகிய 2 மாடல்களிலுமே - நான்கு பக்கங்களிலும் அல்ட்ரா-ஸ்லிம் பெஸல்கள் மற்றும் 1.5K ரெசல்யூஷன் உடனான கஸ்டமைஸ்டு BOE X2 8T LTPO பிளாட் டிஸ்பிளேக்களை கொண்டிருக்கலாம்.

ப்ராசஸரை பொறுத்தவரை, பேஸிக் ஒன்பிளஸ் ஏஸ் 5 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பெறலாம்; ப்ரோ வேரியண்டில் இன்னும் வெளியிடப்படாத ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் பேக் செய்யப்படலாம். மேலும் இரண்டுமே ஸ்மார்ட்போன்களும் 6000mAh பேட்டரிகளை கொண்டிருக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை, இரண்டுமே 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டுடன் வரலாம். கடைசியாக இது அல்ட்ரா ஸ்லிம் ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்களையும் பெறலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரிஸ் எப்போது அறிமுகமாகும்? இது சீனாவில், வருகிற நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். குறிப்பிடத்தக்க வகையில் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ மாடல் இந்த ஆண்டு ஜூன் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதே சமயம் vவெண்ணிலா வேரியண்ட் ஆன ஒன்பிளஸ் ஏஸ் 3 மாடலானது ஜனவரி 2024 வெளியிடப்பட்டது.

ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரிஸ் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.45,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 5 ப்ரோ மாடல் ஆனது சுமார் ரூ.49,990 க்கு வெளியாகலாம். இதே மாடல்கள் ஆர் சீரிஸின் கீழ் இந்தியாவில் அறிமுகமாகும் போது, வேறுபட்ட விலை நிர்ணயங்களை பெறலாம்.

ஒன்பிளஸ் 13 எப்போது அறிமுகமாகும்? சீனாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அறிமுகமானது "அக்டோபர் இறுதியில் இருந்து நவம்பர் தொடக்கத்திற்குள்" நடக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளதாம். சீனாவில் சிங்கிள்ஸ் டே என்று மிகவும் பிரபலமாக அறியப்படும், சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் ஷாப்பிங் திருவிழா நவம்பர் 11 அன்று நடைபெறுகிறது. ஆக ஒன்பிளஸ் 13 இதற்கு முன்பாகவே அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? சீன அறிமுகம் விரைவாக நடந்தால், இந்திய அறிமுகமாகும் விரைவாக நடக்கும். இந்தியாவில் இது ரூ.65,000-க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஸ்மாட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கு அறிமுகமானது.

Best Mobiles in India

English summary
OnePlus Ace 5 Ace 5 Pro with 6000 mAh Battery Ultra Thin Optical Fingerprint Sensors Launch Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X