அடுத்த வாரம் கன்ஃபார்ம்.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா..16GB ரேம்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் சிப்செட், OLED டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தற்போது வெளியான தகவலின்படி, அடுத்த வாரம் ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த ஒன்பிளஸ் ஒன்பிளஸ் ஏஸ் 3வி போன் ஆனது உலக சந்தையில் ஒன்பிளஸ் நோர்ட் 4 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் ஏஸ் 3வி அம்சங்கள் (OnePlus Ace 3V specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 chipset) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட்.
அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி வெளிவரும். அதேபோல 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3வி அறிமுகம் செய்யப்படும். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3வி 50எம்பி டூயல் ரியர் கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5கே ரெசல்யூஷன் கொண்ட OLED டிஸ்பிளே வசதியுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் ஆனது 5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவரும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W fast charging) வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை சார்ஜ் சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
Source: weibo.com


Click it and Unblock the Notifications








