Home
Mobile

OnePlus விஸ்வரூபம்.. ரூ.23,400 போதும்.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

வேற எந்த போனும் வேண்டாம், இது வரட்டும் என்று ஒன்பிளஸ் பிரியர்களை வெயிட்டிங் மோடில் வைக்கும் பட்ஜெட்டில் 12ஜிபி ரேம், 100W சார்ஜிங், சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற அம்சங்களுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி (OnePlus Ace 3V) வெளியாகியிருக்கிறது.

ஒன்பிளஸ் ஏஸ் 3வி அம்சங்கள் (OnePlus Ace 3V Specifications): இந்த மாடலில் 6.74 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

OnePlus விஸ்வரூபம்.. ரூ.23400 போதும்.. SONY கேமரா.. 100W சார்ஜ் போன்!

அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 7+ Gen 3 4nm Mobile) சிப்செட் வருகிறது. கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது.

இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3வி போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதிக ரேம், மிட்-ரேஞ்ச் சிப்செட் இருப்பதால், கேமிங் உள்பட அனைத்து பர்ஃபாமென்ஸ் அவுட்புட்டும் மிரளவிடும்படி இருக்கும்.

இந்த போனின் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) பிரீமியம் சென்சார்களுடன் வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. மெயின் கேமராவில் OIS சப்போர்ட் உள்ளது.

OnePlus விஸ்வரூபம்.. ரூ.23400 போதும்.. SONY கேமரா.. 100W சார்ஜ் போன்!

அதேபோல சாம்சங் எஸ்5கே3பி9 (Samsung S5K3P9) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவை போலவே, பேட்டரி சிஸ்டமும் மிரளவிட்டுள்ளது. 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) மற்றும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது.

டியாகாங் கூலிங் சிஸ்டம் (Tiangong Cooling System) சப்போர்ட் வருகிறது. பேட்டரி கேபாசிட்டி அதிகமாக இருப்பதால், 200 கிராம் எடை கொண்டிருக்கிறது. 8.47 மிமீ தடிமன் வருகிறது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3வி மாடலில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) ஜாக் உள்ளது. அதேபோல டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த போனில் டைட்டானியம் கிரோ (Titanium Gray) மற்றும் மேஜிக் பர்பிள் சில்வர் (Magic Purple Silver) ஆகிய 2 கலர்கள் இருக்கின்றன.

இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,400ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,915ஆகவும் இருக்கிறது. அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலின் விலை ரூ.30,430ஆகவும் இருக்கிறது.

இப்போது, சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் 25ஆம் தேதி முதல் அங்கு விற்பனைக்கு வர இருக்கிறது. அதன்பிறகு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) மாடலாக ரீபிராண்ட் செய்யப்பட்டு விற்பனைக்கு வர இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 3V With 50MP Camera, 12GB RAM Sale From March 25 in China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X