மார்ச் 21 கன்ஃபார்ம்.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. OLED டிஸ்பிளே.. புதிய OnePlus போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போனை வரும் நாட்களில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இப்போது ஒன்பிளஸ் ஏஸ் 3வி போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ஒன்பிளஸ் ஏஸ் 3வி அம்சங்கள் (OnePlus Ace 3V specifications): 50எம்பி டூயல் ரியர் கேமராவுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி 5 வெளிவரும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

1.5கே ரெசல்யூஷன் கொண்ட OLED டிஸ்பிளே வசதியுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி அறிமுகம் செய்யப்படும். 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 chipset) உடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3வி அறிமுகம் செய்யப்படும். இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி வெளிவரும்.

16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3வி அறிமுகம் செய்யப்படும். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W fast charging) வசதியும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.

யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் தரமான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
எப்போது அறிமுகம்: ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் ஆனது வரும் மார்ச் 21-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதே ஒன்பிளஸ் ஏஸ் 3வி போன் ஆனது ஒன்பிளஸ் நோர்ட் 4 எனும் பெயரில் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








