Home
Mobile

'க்யூட்'-ஆ இருக்கு.. டூயல் கேமரா.. 100W சார்ஜிங்.. 512GB மெமரி.. புதிய ஒன்பிளஸ் போன் ரெடி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் ஏஸ் 3வி போன் ஆனது இந்த மாதம் இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதே ஒன்பிளஸ் ஏஸ் 3வி மாடல் ஆனது இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) எனும் பெயரில் அறிமுகமாகும்.

குறிப்பாக ஒன்பிளஸ் ஏஸ் 3வி போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு, அட்டகாசமான கேமரா, சிறந்த மென்பொருள் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அறிமுகமாகும். இந்நிலையில் ஒன்பிளஸ் ஏஸ் 3வி போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

'க்யூட்'-ஆ இருக்கு.. புதிய ஒன்பிளஸ் போன் ரெடி.. எந்த மாடல்?

அதன்படி இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டு கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு உள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் போன் டூயல் ரியர் கேமரா உடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் ஏஸ் 3வி அம்சங்கள் (OnePlus Ace 3V specifications): 50எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3வி அறிமுகம் செய்யப்படும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 chipset) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட். மேலும் அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி அறிமுகமாகும்.

ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W fast charging) வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை சார்ஜ் சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

'க்யூட்'-ஆ இருக்கு.. புதிய ஒன்பிளஸ் போன் ரெடி.. எந்த மாடல்?

குறிப்பாக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5கே ரெசல்யூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி அறிமுகம் செய்யப்படும். அதேபோல் 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போனில் யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் 4 போன்.

photo courtesy: weibo.com, MaxJmb, fonearena

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 3V images leaked online: check design, specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X