Home
Mobile

விஸ்வரூப மாடல்.. 24GB ரேம்.. 1TB மெமரி.. 100W சார்ஜிங்.. சோனி கேமரா.. எந்த போன்?

ஒன்பிளஸ் நிறுவனம் அக்டோபர் மாதம் நிறைய சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஒன்பிளஸ் பேட் கோ, இயர்பட்ஸ், ஒன்பிளஸ் ஏஸ் 3 ஆகிய சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு தான் உலக சந்தை மற்றும் இந்தியச் சந்தைகளில் அறிமுகமாகும்.

அதேபோல் ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) ஸ்மார்ட்போன் ஆனது உலக சந்தை மற்றும் இந்தியாவில் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) எனும் பெயரில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

விஸ்வரூப மாடல்.. 24GB ரேம்.. 100W சார்ஜிங்.. சோனி கேமரா.. எந்த போன்?

அதாவது ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.74-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1.5 ரெசொலூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனில் மிகவும் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

அதேபோல் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டு ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்ந போன் மேம்பட்ட பல புதிய அம்சங்களை வழங்கும். பின்பு 24ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய ஒன்பிளஸ் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் ( Sony IMX890 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு ஓம்னிவிஷன் ஓவி8டி10 (OmniVision OV8D10) சென்சார் + 32எம்பி டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஐபி68 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவர இருக்கிறது இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விஸ்வரூப மாடல்.. 24GB ரேம்.. 100W சார்ஜிங்.. சோனி கேமரா.. எந்த போன்?

5500 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கூட உள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரிபேக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை ஏசி, புளூடூத் 5.2, என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன். மேலும் பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 3 will be launched in October: Specs leaked online: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X