மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இதே ஒன்பிளஸ் ஏஸ் 3 போன் ஆனது இந்தியாவில் ஒன்பிளஸ் 12ஆர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் மீண்டும் ஒரு ஒன்பிளஸ் போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ என்ற பெயரில் விரைவில் சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். மேலும் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ அம்சங்கள் (OnePlus Ace 3 Pro specifications): 1.5கே 8டி எல்டிபிஒ கர்வ் (8T LTPO curved) டிஸ்பிளே வசதியுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ( Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனின் வீடியோ எடிட்டிங், கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனுக்கு வழங்கப்படும் சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போனின் ரியர் கேமரா ஆனது சோனி சென்சார் வசதியும் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளை கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

5500எம்எஎச் பேட்டரி வசதியுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.
அதேபோல் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதே ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ போன் ஆனது இந்தியாவில் வேறு பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 3வி போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பின்பு இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ மாடலுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








