Home
Mobile

OnePlus விஸ்வரூபம்.. ஜூன் 27 காலி.. 100W சார்ஜிங்.. 6100mAh பேட்டரி.. செராமிக் ஒயிட்.. எந்த மாடல்?

வாங்குனா இந்த போன்தான், அது வரட்டும் அப்புறம் வேற போன் பத்தி பார்க்கலாமென்று, ஒட்டுமொத்த ஒன்பிளஸ் பிரியர்களும் காத்திருக்கும்படி ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ (OnePlus Ace 3 Pro) போன் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இப்போது, அந்த போனின் வெளியீட்டு தேதி மற்றும் முக்கிய பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்களையும் அறக்க பறக்க செய்துள்ளது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ போனின் விவரங்கள் இதோ.

கேமரா, சிப்செட், டிஸ்பிளே பீச்சர்களில் ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு அடுத்தப்படியாக ஒன்பிளஸ் மாடல்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போது, ஒட்டுமொத்த கவனமும் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ போன் மீதே இருக்கிறது. ஏனென்றால், 6100mAh கிளாசியர் பேட்டரியுடன் வெளியாகும் முதல் ஒன்பிளஸ் மாடலாகும்.

OnePlus விஸ்வரூபம்.. ஜூன் 27 காலி.. 100W சார்ஜிங்.. 6100mAh பேட்டரி!

சிலிக்கான்-கார்பன் நெகடிவ் எலக்ட்ரோட் சப்போர்ட் கொண்ட இந்த பேட்டரி மூலம் அதிகப்படியான டியூரபிலிட்டி பெறலாம். இதன் மூலம் 4 வருடங்களுக்கு பிறகும் 80 சதவீத பேட்டரி ஹெல்த்தை நீட்டிக்க முடியும். இதற்காக ஏடிஎல் நிறுவனத்துடன் ஒன்பிளஸ் கைகோர்த்துள்ளது. இந்த பேட்டரி மட்டுமல்லாமல், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சருடன் ஏஸ் 3 ப்ரோ வெளியாக இருக்கிறது.

ஆகவே, வெறும் 36 நிமிடங்களில் 6100mAh பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த பேட்டரிக்கு அடுத்து அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) சிப்செட் வருகிறது. டிசைனை பார்க்கையில், மெட்டல் மிடில் ஃபிரேம் (Metal Middle Frame) வருகிறது.

முந்தைய பிரீமியம் மாடல்களை போலவே டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera) வருகிறது. செராமிக் ஒயிட் (Ceramic White) கலர் கொண்டிருக்கிறது. இந்த பீச்சர்கள் மற்றும் டிசைன் விவரங்களை மட்டுமே ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல ஜூன் 7ஆம் தேதி சீனாவில் வெளியாவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

OnePlus விஸ்வரூபம்.. ஜூன் 27 காலி.. 100W சார்ஜிங்.. 6100mAh பேட்டரி!

இந்த தேதிக்கு பிறகு குளோபல் வெளியீடு இருக்கும். இந்தியா உள்பட மற்ற நாடுகளில் ஆகஸ்ட் மாதத்தில் இந்த போனை எதிர்பார்க்கலாம். சொல்லப்போனால், இப்போதில் இருந்தே இந்திய ஒன்பிளஸ் பிரியர்கள் மரண வெயிட்டிங் மோடில் இருக்க தொடங்கிவிட்டனர். இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ போனின் கசிந்த அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ அம்சங்கள் (OnePlus Ace 3 Pro Specifications): இந்த மாடலில் 6.78 இன்ச் 8டி எல்டிபிஓ ஓஎல்இடி (8T LTPO OLED) டிஸ்பிளே வருகிறது. பிஓஈ எக்ஸ்1 (BOE X1) பேனல் கொண்டிருக்கிறது. இதுவொரு 3டி கரவ்ட் ப்ரோஎக்ஸ்டிஆர் டிஸ்பிளே (3D Curved ProXDR Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 2,1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ அல்லது டெப்த் கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டைப்-சி ஆடியோ வருகிறது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் சிம் சிலாட் வருகிறது. இந்த போனில் 8 ஜிபி முதல், 12 ஜிபி வரையில் ரேம் மாடல்கள் வெளியாகிறது. அதேபோல 128 ஜிபி முதல் 1 டிபி வரையில் ஸ்டோரேஜ் சப்போர்ட் வருகிறது. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோவின் ஆரம்ப விலையானது, ரூ.35,000 முதல் ரூ.40,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Ace 3 Pro With 6100mAh Glacier Battery To Launch on June 27 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X