Home
Mobile

அடேங்கப்பா.. செம்மையா இருக்கு.. புதிய 5ஜி போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த OnePlus.!

இந்த வருடம் தொடக்கம் முதல் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். குறிப்பாகஎஇந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய போன் வேறு பெயரில் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இப்போது ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய 5ஜி போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த OnePlus.!

ஒஎல்இடி டிஸ்பிளே

ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போன் ஆனது 6.74-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2772 x 1240 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1450 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimesnity 9000 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் ColorOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

புதிய 5ஜி போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த OnePlus.!

ட்ரிபிள் ரியர் கேமரா

புதிய ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது.

புதிய 5ஜி போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த OnePlus.!

பாஸ்ட் சார்ஜிங் வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

புதிய 5ஜி போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த OnePlus.!

கனெக்டிவிட்டி

டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.3, ஜிஎன்எஸ்எஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் CNY 2,299 (இந்திய மதிப்பில் ரூ.27,145) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 2V With Dimensity 9000 SoC Launched in India: Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X