Home
Mobile

வெளியானது பட்ஜெட் விலை OnePlus போனின் டீசர்: என்ன மாடல்? எப்போது அறிமுகம்?

சியோமி, விவோ நிறுவனங்களை விட ஒன்பிளஸ் நிறுவனம் இந்த தொடக்கம் முதல் புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து அதிரடி காட்டி வருகிறது. குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட சற்று உயர்வான விலையில் போன்களை அறிமுகம் செய்தாலும், அதற்குத் தகுந்த அனைத்து தரமான அம்சங்களும் இருக்கும்.

எப்போது அறிமுகம்?
இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus Ace 2V எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஒன்பிளஸ் Ace 2V போன் வரும் மார்ச் 7-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதே ஒன்பிளஸ் Ace 2V போன் ஆனது ஒன்பிளஸ் நோர்ட் 3 எனும் பெயரில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

வெளியானது பட்ஜெட் விலை OnePlus போனின் டீசர்: என்ன மாடல்?

தற்போது இந்த ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோ இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

என்னென்ன அம்சங்கள்?
ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போன் ஆனது பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். அதாவது இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போன் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும்.

வெளியானது பட்ஜெட் விலை OnePlus போனின் டீசர்: என்ன மாடல்?

இந்த புதிய ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த மீடியாடெக் Dimensity 9000 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

ட்ரிபிள் ரியர் கேமரா
ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.

வெளியானது பட்ஜெட் விலை OnePlus போனின் டீசர்: என்ன மாடல்?

புதிய ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாடலாம். அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியானது பட்ஜெட் விலை OnePlus போனின் டீசர்: என்ன மாடல்?

பட்ஜெட் விலை
5ஜி,4ஜி வோல்ட், வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய ஒன்பிளஸ் Ace 2V ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Ace 2V Smartphone Teaser Released: Specifications, features And More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X