Home
Mobile

அடேங்கப்பா.. ஒன்பிளஸ் 11 போனுக்கு அடுத்து 100W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் தரமான ஸ்மார்ட்போன்.!

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் ஐபோன்களுக்கு அடுத்து இந்த ஒன்பிளஸ் போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுக்கு பிறகு ஒரு அட்டகாசமான புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

ஜனவரி 4-ம் தேதி

ஜனவரி 4-ம் தேதி

அதாவது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 4-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் அறிமுகமானதும் ஒன்பிளஸ் Ace 2 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

பட்ஜெட் விலை

குறிப்பாக ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன் ஆனது தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் 1.5K Fluid AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். குறிப்பாக தனித்துவமான வடிவமைப்புடன் இந்த போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

தரமான சிப்செட்

தரமான சிப்செட்

புதிய ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறந்த செயல்திறன் கொடுக்கும். அதேபோல் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவுகிறது இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும்.

ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன்

இந்த புதிய போனில் 8ஜிபி/12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இருக்கும்.

கேமரா எப்படி?

கேமரா எப்படி?

50எம்பி (Sony IMX890 sensor) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

புதிய ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

 இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்

அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்,வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அசத்தலான ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus Ace 2 smartphone to launch soon with 50MP rear camera: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X