ஆல் ஏரியாவிலும் கில்லி.. 1.5K டிஸ்பிளே.. 150W சார்ஜிங்.. 24GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ (OnePlus Ace 2 Pro) போனின் டிஸ்பிளே, சிப்செட், ரேம், பேட்டரி போன்ற ஒட்டுமொத்த அம்சங்களும், ஸ்மார்ட்போன் மார்கெட்டையே அதிர வைக்கும்படி இருக்கிறது. இந்த போனின் முழு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
உலக ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போன் மீதான எதிர்பார்ப்பு என்பது ஆப்பிள் (Apple) போன்களுக்கு நிகராக மாறிவிட்டது. ஏனென்றால், ஒட்டுமொத்த பிரீமியம் அம்சங்கள் மட்டுமல்லாமல், இதுவரை வெளியான எந்த போன்களிலும் கொடுக்கப்படாத அம்சங்களும் அந்த போனில் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்த விவரங்கள் பல முறை கசிந்தும், ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி செய்யாமல் இருந்து வந்தது. இப்போது, டிஸ்பிளே, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் குறித்த தகவலை அந்த நிறுவனமே உறுதி செய்துள்ளது. அந்த வகையில், ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போன், 6.74 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) ஃபிளக்சிபிள் ஓஎல்இடி (OLED) போய் க்யூ9 பிளஸ் (BOE Q9+) டிஸ்பிளே கொண்டுள்ளது.
இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசொலூஷன், 450 பிபிஐ (PPI) பிக்சல் டென்சிட்டி, 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.07 பில்லியன் டிஸ்பிளே கலர்கள், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), 2.17 மிமீ அல்ட்ரா நேரோவ் பாட்டம் பெசல் (Ultra Narrow Bottom Bezel) சப்போர்ட் வருகிறது. அதோடு 1440Hz பிடபுள்யூஎம் (PWM) டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 150W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியை வெறும் 17 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ளலாம். மொத்தமாக 4 வருடங்களில் 1600 முறை சார்ஜிங் செய்து கொள்ளும் வகையில் பேட்டரியின் தரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் மற்ற அம்சங்கள் எப்படி இருக்கும்? இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS), கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1), அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வருகிறது.
இந்த ஒன்பிளஸ் ஏஸ் 1 ப்ரோ போனின் கேமரா டிரிபிள் ரியர் செட்டப் கொண்டுள்ளது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சொன்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அந்த கேமராவோடு 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த போனில் 24 ஜிபி ரேம் வருகிறது. அதில் 16 ஜிபி பிசிகல் ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் இடம்பெறும். அதோடு 1 டிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் வருவதால், பேட்டரி தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க, ஏரோஸ்பேஸ் கிரேடு 3டி டியான்காங் கூலிங் சிஸ்டம் (Aerospace Grade 3D Tiangong Cooling System) என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பேட்டரி ஹீட் கன்ட்ரோல், அன்லிமிடெட் சார்ஜிங் கன்ட்ரோல், நைட் சார்ஜ் கன்ட்ரோல் போன்ற அம்சங்கள் கொடுக்கப்படும். இந்த ஒன்பிளஸ் போன் சியான் (Cyan) மற்றும் கிரே (Grey) கலர்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
அதற்கு அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த ஒன்பிளஸ் போனின் விலையை பொறுவத்தவரையில் ரூ. 40,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த பட்ஜெட்டில் இவ்வளவு அம்சங்களை கொண்ட ஒரே போனாக ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications