ஒன்பிளஸ் மிரட்டல்.. ஏரோஸ்பேஸ் சிஸ்டம்.. 24GB ரேம்.. 1TB மெமரி.. 150W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய, ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ (OnePlus Ace 2 Pro) போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போன் 24ஜிபி ரேம், 1 டிபி மெமரி என்று அம்சங்களில் பின்னி எடுக்கிறது.
உலகளவில் 24 ஜிபி ரேம் கொண்ட போன்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஏனென்றால், இதுவரை ரெட்மேஜிக் 8 எஸ் ப்ரோ என்னும் ஒரேவொரு போன் மட்டுமே 24 ஜிபி ரேம் உடன் வெளியாகியிருக்கிறது. இந்த போனின் வருகைக்குப்பின் 24 ஜிபி ரேம் கொண்ட போன்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.

இதனால், ஒன்பிளஸ், ரியல்மி போன்ற மிகப்பெரும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது, ஃபிளாக்ஷிப் போன்களில் 24 ஜிபி ரேமை கொடுக்க திட்டமிட்டுள்ளன. அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனே 24 ஜிபி ரேம் கொண்ட உலகின் 2 ஆவது போனாக வெளியாகிறது. இந்த போனின் முழு அம்சங்கள், வெளியீட்டு தேதி விவரங்கள் பின்வருமாறு.
ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ அம்சங்கள் (OnePlus Ace 2 Pro Specifications): இந்த ஒன்பிளஸ் போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் கொண்டிருக்கிறது.
கேமிங் பிரியர்களை கவரும்படி, அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரையில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் (1240x2772 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FH+) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 1440Hz பிடபுள்யூஎம் (PWM) டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏஸ் 1 ப்ரோ போன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. அதன்படி, சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சொன்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் போன் முன்னதாக, ப்ளூ (Blue), சில்வர் (Silver) மற்றும் பிளாக் (Black) ஆகிய 3 கலர்களில் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால், இப்போது, சியான் (Cyan) மற்றும் கிரே கலர்களில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் பிரம்மாண்ட அம்சமாக 16 ஜிபி ரேம் வருகிறது. அதோடு 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, மொத்தம் 24 ஜிபி ரேம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 24 ஜிபி ரேம் உடன் 1 டிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்பிளஸ் போனில் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. அதிகப்படியான பாஸ்ட் சார்ஜிங் வசதி வருவதால், ஏரோஸ்பேஸ் கிரேடு 3டி டியான்காங் கூலிங் சிஸ்டம் (Aerospace Grade 3D Tiangong Cooling System) என்னும் பிரத்யேக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் மூலம் பேட்டரி தொடர்பான எந்தவொரு பிரச்சனைகளும் ஏற்படாது. இந்த போன் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சீனாவில் வெளியாகிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒன்பிளஸ் போனின் விலை ரூ. 40,000 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








