Home
Mobile

மிரண்டு போன மார்கெட்.. 24GB ரேம்.. 150W சார்ஜிங்.. SONY கேமரா.. எல்லா போன்களுக்கும் மேல.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டே அதிரும்படி 24ஜிபி பிசிகல் ரேம் கொண்ட உலகின் முதல் போனாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ (OnePlus Ace 2 Pro) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மற்ற அம்சங்களை பார்த்தால், தலையே சுற்றிவிடும் போலிருக்கிறது.

இதுவரை வெளியான எந்த போன்களிலும் கொடுக்கப்படாத அம்சங்களுடன் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோனி சென்சார் கேமரா, 150W ஃபாஸ்ட் சார்ஜிங், 1 டிபி மெமரி, 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே என்று எதைப் பார்த்தாலும் பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்த போனின் முழு அம்சங்கள் மற்றும் விலை பட்டியல் குறித்த விவரம் பின்வருமாறு.

24GB ரேம்.. 150W சார்ஜிங்.. SONY கேமரா.. 150W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ அம்சங்கள் (OnePlus Ace 2 Pro specifications): இந்த போன் 6.74 இன்ச் (2772×1240 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 120Hz/90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 450 பிபிஐ (PPI) பிக்சல் டென்சிட்டி, 2160Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் மற்றும் 1.5K ரெசொலூஷன் சப்போர்ட் இருக்கிறது.

இந்த ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13)கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வருகிறது. அதோடு ஆக்ஸிஜன் ஓஎஸ் 13 (OxygenOS 13) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி என்று மூன்று மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. அதன்படி சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் கூடிய 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivision OV02B10) சென்சாருடன் கூடிய 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதேபோல சாம்சங் எஸ்5கே3பி9 (Samsung S5K3P9 ) சென்சாருடன் கூடிய 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேமராவை பொறுத்தவரையில் ஆப்பிள் போன்களுக்கு நிகரான போட்டோ குவாலிட்டி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஒன்பிளஸ் போனில் மற்றொரு பிரம்மாண்ட அம்சமாக 150W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு ஏரோஸ்பேஸ் கிரேடு 3டி டியான்காங் கூலிங் சிஸ்டம் (Aerospace Grade 3D Tiangong Cooling System) என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் பேட்டரி தொடர்பான கோளாறுகள் ஏற்படாமல் இருக்க கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த போன் அரோரா கிரீன் (Aurora Green), டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இன்று (ஆகஸ்ட் 16) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது.

அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்த போனின் 12 ஜிபி + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.34,200ஆகவும், 16 ஜிபி ரேம் +512 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.39,185ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே போல 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலின் விலை ரூ.45,610 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு விலைக்கு ஏற்ப அதன் அம்சங்களும் மிகவும் பக்காவாக கொடுக்கப்பட்டுள்ளதால், நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 2 Pro With 24GB RAM, 1TB Storage, 5000mah Battery, Sale Date Specification, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X